நம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay
சென்னை: உலகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. பிரபலங்களும், சாதாரண மக்களும் தங்களின் தந்தைக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த காரணத்தால் #FathersDay என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

அப்பா
தமிழ் திரையுலகில் அப்பாவின் பெருமையை எடுத்துக்கூறும் பாடல்கள் பல உள்ளன. அதில் ஒரு சிலவற்றை தொகுத்து அளிக்கிறோம். மகனை அளவுக்கு அதிகமாக நேசித்தாலும் அதை அவனிடம் வெளிப்படையாக கூறாதவர் அப்பா. பிள்ளைகள் கேட்கிறார்களோ இல்லையோ நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் என்று கூறிக் கொண்டே இருப்பவர் அம்மா.
தெய்வத் திருமகள்
தெய்வத்திருமகள் படத்தில் தந்தை தனது மகளுக்கு பாடும் தாலாட்டை பார்த்து ஃபீல் பண்ணாதவர்களே இருக்க முடியாது. கேட்க கேட்க இனிமையாக இருக்கும் பாடல்.
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அப்பா பாடல்கள் என்றதுமே தங்கமீன்கள் படத்தில் வரும் ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் நிச்சயம் நம் நினைவுக்கு வரும்.
தெய்வங்கள்
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் வரும் தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பாடல் அனைவருக்கும் பிடித்த அப்பா பாடல் ஆகும். நிஜத்தில் தந்தையை இழந்த சிவகார்த்திகேயன் அவரை தினம் தினம் மிஸ் பண்ணுகிறார்.
வாவா என் தேவதையே
அபியும் நானும் படத்தில் மகளை கொண்டாடும் அற்புதமான தந்தையாக நடித்திருந்தார் பிரகாஷ் ராஜ்.
அஜித்
என்னை அறிந்தால் படத்தில் வரும் உனக்கென்ன வேணும் சொல்லு பாடலும் தந்தையர் தின ஸ்பெஷல் தான்.
விஜய்
தெறி படத்தில் மகளுக்காக வாழும் விஜய் ரசிகர்களை கவர்ந்தார். ஈனா, மீனா டீகா பாடல் குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்த பாடல் ஆகும்.


Click it and Unblock the Notifications











