twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உலக உணவு தினத்தில் எல்லோருக்கும் இலவச உணவு - ஏ.ஆர்.ரெய்ஹானா உடன் சாப்பிட வாங்க

    |

    சென்னை: எல்லோருக்குமே போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், உலக உணவு தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ஆம் தேதியன்று அனைத்து உலக நாடுகளிலும் கடைபிடிக்கப்படுகிறது. சென்னையில் இந்த விழிப்புணர்வு சேவையை ரெயின்ட்ராப்ஸ் மற்றும் பிரியாணி பிரதர்ஸ் உணவகம் இணைந்து இலசவமாக உணவு வழங்கும் சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

    உலக உணவு தினம் என்பது வறுமையின் கொடுமையினால், பட்டினியில் வாடும் விளிம்பு நிலை மக்களின் உணவுத் தேவையை தீர்க்கும் ஒரு விழிப்புணர்வு முயற்சியாகும். இன்றைய சூழ்நிலையில் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் கஷ்டப்படுபவர்கள் பலர் உள்ளனர்.

    World Food Day Celebration on October 16

    எல்லோருக்குமே போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், உலக உணவு தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ஆம் தேதியன்று அனைத்து உலக நாடுகளிலும் கடைபிடிக்கப்படுகிறது.

    உடல் ஊனமுற்றவர்கள், இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள், உயிர் வாழ உணவு தரவேண்டியது ஒவ்வொரு நாட்டின் ஒவ்வொரு அரசின் கடமை என்று ஐ.நா சபை தெரிவித்திருக்கிறது. எதிர்காலத்தில் பணமிருந்தாலும், மாறிவிட்ட மக்களின் வாழ்க்கை முறை காரணமாக உணவு கிடைக்காத நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

    என்னம்மா பொசுக்குன்னு பிரதமர டேக் பண்ணீட்டிங்க.. விட்டா எல்லாரையும் கிறுக்கன் ஆக்கிறுவீங்க!என்னம்மா பொசுக்குன்னு பிரதமர டேக் பண்ணீட்டிங்க.. விட்டா எல்லாரையும் கிறுக்கன் ஆக்கிறுவீங்க!

    இதனை வலியுறுத்துவதற்காகவே, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ஆம் தேதியன்று உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விழிப்புணர்வு சேவையை ரெயின்ட்ராப்ஸ் மற்றும் பிரியாணி பிரதர்ஸ் உணவகம் இணைந்து இலசவமாக உணவு வழங்கும் சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

    ரெய்ன்ட்ராப்ஸ் இலவச உணவு வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரியும், இசையமைப்பாளரும் பாடகியுமான ஏ.ஆர்.ரெய்ஹானா, பாடலாசிரியர் கவிஞர் திரு. சிநேகன், பிரியாணி பிரதர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சரண் ஆகியோர் முன்வந்துள்ளனர்.

    இந்த உணவு வாகனம், அண்ணா நகரிலிருந்து புறப்பட்டு கோயம்பேடு மார்க்கெட் வழியாக, விருகம்பாக்கம், சாலிகிராமம் ஆகிய இடங்களுக்கு சென்று பசியில் இருக்கும் மக்களுக்கு உணவினை பரிமாறும்.

    நாள்: 16 October 2019, Wednesday
    நேரம்: காலை 11.45
    இடம்: No 2678, Y Block, 9th Street, 12th Main Road, Shanthi Colony, Anna Nagar, Chennai 600 040

    இந்நிகழ்வில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் சுயமாக கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி பணியாற்றிட முன் வந்துள்ளார்கள்.

    English summary
    World Food Day is celebrated on October 16 every year in all countries, with goodwill to ensure that there is enough food for all. This awareness service in Chennai is jointly organized by Raindrops and Biryani Brothers Restaurant.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X