உலக புகைப்படதினம்.. சிரஞ்சீவி வெளியிட்ட அரிய புகைப்படம்… பிரபலம் யாரு கண்டுபிடிங்க பார்ப்போம் !

ஹைதராபாத் : நேற்று உலக புகைப்பட தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டதையொட்டி பலரும் தாங்கள் எடுத்த சிறந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு புகைப்பட தினத்தை கொண்டாடி வந்தனர்.

Recommended Video

பாலுவுடனான எனது உறவு சினிமாவுக்கு அப்பாற்பட்டது.. தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி உருக்கம்!

அந்த வகையில் பல்வேறு திரை பிரபலங்களும் தங்களுடைய வாழ்க்கையில் எடுத்த மிகச்சிறந்த புகைப்படத்தை பதிவிட்டு வந்த நிலையில் நடிகர் சிரஞ்சீவியும் சுவாரசியமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார்.

லாக் டவுனில் பல்வேறு வேலைகளை செய்து அசத்தி வரும் நடிகர் சிரஞ்சீவி தற்போது வெளியிட்டுள்ள இந்த அரிய பிளாக் அண்ட் வொயிட் புகைப்படத்தில் இருக்கும் அந்த பிரபலம் யாரென கேட்டதையடுத்து ரசிகர்கள் பலரும் அதற்கு சுவாரசியமான பதில்களை அளித்து வருகின்றனர்.

கலக்கி வருகிறார்

கலக்கி வருகிறார்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களாலும் மிகவும் கொண்டாடப்படும் சிறந்த நடிகராகவும், அதேசமயம் அரசியல்வாதியாகவும் தற்பொழுது கலக்கி வருகிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில்

முக்கிய கதாபாத்திரத்தில்

சமீபத்தில் இவரது நடிப்பில் "சை ரா நரசிம்ம ரெட்டி" என்ற திரைப்படம் மாபெரும் பொருட்செலவில் உருவாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்பொழுது "ஆசார்யா" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் "சை ரா நரசிம்ம ரெட்டி" திரைப்படத்தில் அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, தமன்னா மற்றும் நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ரசிகர்களுக்கு அறிவுரை

ரசிகர்களுக்கு அறிவுரை

லாக் டவுனில் வீட்டில் இருக்கும் நேரத்தில் பல்வேறு வீட்டு வேலைகளையும், சமையல் வேலைகளையும் செய்து அசத்தி வரும் சிரஞ்சீவி அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தனது ரசிகர்களையும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் வீட்டில் உள்ளவர்களுக்கு இதுபோன்று உதவி செய்யுமாறு அவ்வப்போது அறிவுரை வழங்கி வருகிறார்.

அந்த பிரபலமான நபர் யார்

அந்த பிரபலமான நபர் யார்

இந்நிலையில் நேற்று உலக புகைப்பட தினம் கொண்டாடபட்டதை ஒட்டி பல்வேறு திரைப்பிரபலங்கள் தங்களது சிறந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தநிலையில் சிரஞ்சீவியும் தான் முதல் முதலில் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தும் இந்த புகைப்படத்தில் இருக்கும் ஐந்து பேரில் அந்த பிரபலமான நபர் யார் என கண்டுபிடிக்கும் படி ரசிகர்களை கேட்டுள்ளார்.

ஐந்து சிறுவர்களில் ஒருவர்

ஐந்து சிறுவர்களில் ஒருவர்

"ஃபர்ஸ்ட் போட்டோ டேக்கன்" என தலைப்பிட்டு ஒரு பிளாக் அண்ட் வொயிட் குரூப் போட்டோ பதிவில் ஐந்து சிறுவர்கள் நிற்க அதை சிரஞ்சீவி கிளிக் செய்துள்ளார். மேலும் இந்த ஐந்து சிறுவர்களில் ஒருவர் உங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர், என செம்மையான குறிப்பை ரசிகர்களுக்கு கொடுத்துவிட்டு முடிந்தால் கண்டுபிடியுங்கள் என ரசிகர்களிடம் கூற, அதை பார்த்த ரசிகர்கள் தங்களது பதில்களை கமெண்டில் மழைபோல் குவித்து திக்குமுக்காட வைத்து வருகின்றனர்.

சிரஞ்சீவிக்கு நன்றிகள்

சிரஞ்சீவிக்கு நன்றிகள்

மேலும் இந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த சிறுவர், சிரஞ்சீவியின் தம்பியும் பிரபல நடிகருமான "பவர் ஸ்டார் பவன் கல்யாண்" என தெரிந்த பவன் கல்யாணின் ரசிகர்கள் இந்த அரிய புகைப்படத்தை வெளியிட்டதற்கு சிரஞ்சீவிக்கு தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படம் ஆல்பா க்ளிக் 3 என்ற கேமராவால் எடுக்கப்பட்டது என அந்த கேமராவின் புகைப்படத்தையும் சிரஞ்சீவி மற்றொரு பதிவில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X