twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    720 மணிநேர சினிமாவிற்கு 72 நிமிட டீசர்: 2020ல் படம் ரிலீஸ்

    By Mayura Akilan
    |

    நம் ஊரில் முன்பு மூன்று மணிநேரம் ஓடிய திரைப்படங்கள் இரண்டரை மணிநேரமாகி, இப்போது இரண்டு மணிநேரமாக சுருங்கியுள்ளது. ஆனால் 30 நாட்கள் தொடர்ந்து ஓடக்கூடிய திரைப்படம் ஒன்றை எடுத்து வருகின்றனர்.

    உலகின் மிக நீளமான சினிமா என்ற சாதனைக்குறிய அந்தப் படத்திற்கு 'ஆம்பியன்ஸ்' என்று பெயரிட்டுள்ளனர். இந்தத் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுமட்டுமே 72 நிமிடமாகும்.

    இதேபோல படத்தில் டிரெய்லர் 7 மணிநேரம் இருக்கும் என்று அறிவித்துள்ளனர். அப்போ படம் 720 மணிநேரம் ஓடும் என்கின்றனர்.

    பத்துநாட்கள் ஓடிய திரைப்படம்

    பத்துநாட்கள் ஓடிய திரைப்படம்

    "மார்டன் டைம்ஸ் போரெவர்" என்கிற படம்தான் தற்போதைய நிலவரப்படி உலகின் மிக நீளமான திரைப்படமாக இருப்பது இது 240 மணி நேரம் ஓடக்கூடியது. அதாவது தொடர்ந்து பத்து நாட்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

    30 நாட்கள் தொடர்ச்சியாக

    30 நாட்கள் தொடர்ச்சியாக

    இப்போது இந்த சாதனையை முறியடிக்கும் விதமாக ஸ்வீடனைச் சேர்ந்த இயக்குனர் ஆண்டர்ஸ் வெப்பெர்க் 720 மணிநேரம் ஓடக்கூடிய அதாவது 30 நாட்கள் தொடர்ந்து ஓடக்கூடிய படத்தை உருவாக்கி வருகிறார். அதற்கு "ஆம்பியன்ஸ்" என்று தலைப்பு வைத்திருக்கிறார்

    சாதனை டீசர்

    சாதனை டீசர்

    கடந்த வாரம் இதன் டீசர் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது அதன் நீளம் மட்டும் 72 நிமிடங்கள். இந்த டீசர் வருகிற 20ந் தேதி வரை மட்டுமே ஆன்லைனில் இருக்கும்.

    7 மணி நேர டிரெய்லர்

    7 மணி நேர டிரெய்லர்

    2016ம் ஆண்டு இதன் டிரைய்லரை வெளியிட இருக்கிறார்கள். டிரைய்லர் மட்டும் 7 மணிநேரம், 20 நிமிடங்கள் இருக்குமாம்.

    2020ல் ரிலீஸ்

    2020ல் ரிலீஸ்

    இந்த படத்தின் படப்பிடிப்புகள் இப்போது பத்து பிரிவுகளாக நடந்து வருகிறது. இதுவரை 280 மணி நேரத்திற்காக படம் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. இந்தப் படம் 2020ம் ஆண்டு டிசம்பர் 31ந் தேதி வெளியிடப்படுகிறது.

    கடைசி திரைப்படம்

    கடைசி திரைப்படம்

    கடந்த 20 வருடங்களாக திரைப்பட இயக்குனராக இருக்கும் ஆண்டர்ஸ் வெபெர்க், ஆம்பியன்ஸ் தான் தனது கடைசி படம் என்று அறிவித்திருக்கிறார்.

    Read more about: movie சினிமா
    English summary
    The world's longest film, set to premiere in 2020, will clock in at 720 hours. Here's a (relatively) brief teaser.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X