அம்பானி வீட்டு கல்யாணத்துல ஆடுனதால ஏப்ப சாப்பையா நினைச்சிறாதீங்க.. ரிஹானா சொத்து மதிப்பு தெரியுமா?

By yogeshwaran moorthi

ஜாம் நகர் : ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரபல பாடகியான ரிஹானாவின் சொத்து மதிப்பு ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகேஷ் அம்பானி - நீட்டா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பாடல் பாடியதன் மூலமாக இந்திய ரசிகர்களின் பார்வை மீண்டும் ரிஹானாவின் பக்கம் திரும்பியுள்ளது. டேவிட் பிளைன், அர்ஜித் சிங், அஜய் - அதுல், தில்ஜித் உள்ளிட்டோர் அம்பானி திருமண நிகழ்ச்சியில் பாடினாலும், ரிஹானா கொடுத்த உற்சாகத்தில் பாலிவுட் நடிகர்கள் பலரும் வைப்பாகினார்கள்.

World s Wealthiest female musician Rihanna Net worth and the details of Music tours and Business

9 கிராமி விருதுகள், 12 பில்போர்ட் விருதுகள், 6 கின்னஸ் சாதனைகளை இசை உலகில் படைத்துள்ள ரிஹானா, சர்வதேச அளவில் அதிக வருவாய் ஈட்டும் இசை கலைஞர்களில் உச்சத்தில் இருக்கிறார். பல ஹாலிவுட் நடிகர்களின் சொத்து மதிப்பை விடவும் ரிஹானாவின் சொத்து மதிப்பு பன்மடங்கு அதிகமாக உள்ளது. இசை கச்சேரி, கான்சர்ட், ஆடை நிறுவனம், விளம்பரங்கள், மாடலிங் என்று பல்வேறு வழிகள் மூலம் ரிஹானாவின் வருவாய் அமைந்துள்ளது.

2010ஆம் ஆண்டு முதலே ரிஹானாவின் வருவாய் அதிகரிக்க தொடங்கியது. அவர் வெளியிட்ட Rated R என்ற ஆல்பத்தை விளம்பரப்படுத்துவதற்காக முதல்முறையாக லாட்ஸ் கேர்ள் ஆன் எர்த் என்ற பயணத்தை மேற்கொண்டார். பல்வேறு நாடுகளிலும் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகள் மூலமாக மட்டும் ரூ.331 கோடி வருவாய் ஈட்டினார். அதன்பின் ரிஹானா மேற்கொண்ட loud Tour அவரின் வருவாயை இரு மடங்காக உயர்த்தியது. இதன் மூலமாக ரூ.745 கோடி வருவாய் ஈட்டினார்.

அதேபோல் 2013ஆம் ஆண்டு டைமண்ட்ஸ் வேர்டு டூர் மூலமாக ரிஹானா மொத்தமாக ரூ.1100 கோடி வருவாய் ஈட்டினார். பின்னர் 2014ஆம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் எமினம் உடன் இணைந்து பங்கேற்ற 6 இசை நிகழ்ச்சிகள் மூலமாக மட்டும் ரிஹானாவுக்கு ரூ.298 கோடி ஊதியமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து Fenty Beauty என்ற அழகு சாதன பொருட்களின் விற்பனை தொழிலை 2017ஆம் ஆண்டு ரிஹானா தொடங்கினார். இவரை பின்பற்றி தான் தற்போது இந்திய நடிகையான நயன்தாரா கூட அழகு சாதன பொருட்கள் விற்பனை தொழிலை தொடங்கியுள்ளார்.

இந்த நிறுவனத்தின் தரப்பில் 2018ஆம் ஆண்டு மட்டும் ரூ.4000 கோடி அளவிற்கு வருமானம் ஈட்டப்பட்டது. பாரிஸை சேர்ந்த எல்விஎம்ஹெச் நிறுவனத்துடன் இணைந்த பின், இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ.23 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. இதுமட்டுமல்லாமல் X Fenty என்ற ஆடை விற்பனை தொழிலை தொடங்கிய ரிஹானா, அதிலும் வெற்றிபெற்றார். இதன் சந்தை மதிப்பு மட்டும் ரூ.2,238 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இன்ஸ்டாகிராம் செயலியில் மட்டும் ரிஹானாவை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 152 மில்லியனாக உள்ளது.

அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரிஹானாவால் பதிவிடப்பட்டும் ஒவ்வொரு ஸ்பான்சர் பதிவுக்கும் ஊதியமாக ரூ,.7 கோடி வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஸ்பாட்டிஃபை உள்ளிட்ட செயலிகளில் ரிஹானாவின் பாடல்களை ஒலி பரப்புவதற்காக ராயல்டியாக மட்டும் கடந்த ஆண்டில் ரூ.80 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரிஹானாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 11 ஆயிரம் கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X