Don't Miss!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
5 ஸ்டார் ஹோட்டல் வழங்கிய உணவில் நெளிந்த புழுக்கள்.. பிரபல நடிகை வீடியோ வெளியிட்டு புகார்!
அகமதாபாத்: ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கிய நடிகை மீரா சோப்ராவுக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை மீரா சோப்ரா இவர் நிலா என்ற பெயரில் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஜாம்பவான், லீ, மருதமலை, காளை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் மீரா சோப்ரா.
மீரா சோப்ரா பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் ஆவார். தொடர்ந்து இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகிறார் மீரா சோப்ரா.
நெளியும் புழுக்கள்
இந்நிலையில் மீரா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பீதியை கிளப்பியுள்ளார். அதில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் நெளிவதாக பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.
குற்றச்சாட்டு
அவர் பதிவிட்டிருக்கும் வீடியோவில் புழு ஒன்று நெளிந்து செல்வதும் வீடியோவில் தெரிகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில்தான் இப்படி புழுக்கள் நெளிவதாக மீரா சோப்ரா குற்றம்சாட்டியுள்ளார்.
உணவில் புழுக்கள்
இதுதொடர்பாக பேசிய அவர், அகமதாபாத்தில் உள்ள டபுள் ட்ரீ ஹில்டன் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கிறேன், ரூம் சர்வீஸ் மூலம் உணவு ஆர்டர் செய்தபோது அதில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
புழுக்கள் உள்ள உணவு
இதுபோன்ற ஹோட்டல்களில் தங்கி அதிக கட்டணத்தை செலுத்துகிறோம். ஆனால் அவர்கள் புழுக்கள் உள்ள உணவை தருகிறார்கள்.
உடம்பு சரியில்லை
கடந்த ஒரு வாரமாக இந்த ஹோட்டலில் தங்கியிருக்கிறேன். இங்கு வந்ததில் இருந்தே உடல்நிலை சரியில்லை. அதற்கான காரணம் இப்போதுதான் தெரிகிறது என கூறியுள்ளார் மீரா சோப்ரா.
|
வைரல் வீடியோ
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.