For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பித்தலாட்டம் பாஸ்.. என்னால தான் ஆரி ஜெய்ச்சாரு.. சர்ச்சையை கிளப்பிய அனிதா சம்பத் வெளியிட்ட ஆடியோ!

  |

  சென்னை: பாலாஜி முருகதாஸ் விருதை திருப்பித் தந்தது, ஆரி சமீபத்தில் பேட்டி அளித்தது அதன் பின்னர் அனிதா சம்பத்துக்கும் தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கும் இடையேயான போன் உரையாடல் என மீண்டும் பிக் பாஸ் சர்ச்சைகள் கிளம்பி உள்ளன.

  வருங்காலத்தில் வாணி போஜன் பெரிய நடிகையாக வருவார்.. இயக்குனர் ராதா மோகன்! வருங்காலத்தில் வாணி போஜன் பெரிய நடிகையாக வருவார்.. இயக்குனர் ராதா மோகன்!

  ஆரியின் வெற்றி பிடிக்காமல் அனிதா சம்பத் பேசுகிறார் என்று ரவீந்திரன் குற்றம்சாட்டுகிறார்.

  பெண் போட்டியாளர்களை கொச்சைப்படுத்துவதே இவருக்கு வேலை நான் ஆரிக்கு சப்போர்ட்டாக தான் பேசியுள்ளேன் என வரிசையாக அனிதா லீக்ஸ் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன.

  பித்தலாட்டம் பாஸ்

  பித்தலாட்டம் பாஸ்

  பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி இதற்கு முன் இல்லாத அளவுக்கு முடிந்த பின்னரும் ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் எப்படி சண்டை போட்டு பரபரப்பை கிளப்பினார்களோ அதே பாணியை வெளியே வந்தும் பிரபலமடைய தேடுகின்றனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  விருது விழா சர்ச்சை

  விருது விழா சர்ச்சை

  பிஹைண்ட்வுட்ஸ் விருது விழாவில் பாலாஜி முருகதாஸ் அந்த யூடியூப் சேனல் விமர்சகர்களை விமர்சித்து பேசியதும், அந்த வீடியோவை ஒளிபரப்பாததும் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. அதன் தொடர்ச்சியாக விருதையும் பாலா திருப்பி அளித்து விட்டது கூடுதல் எண்ணெய்யை ஊற்றியது.

  பாலாவுக்கு சப்போர்ட்

  பாலாவுக்கு சப்போர்ட்

  விருதை திருப்பிக் கொடுத்த பாலாஜி முருகதாஸுக்கு அனிதா சம்பத் ஆதரவாக பேசிய ஆடியோ வெளியாகி இன்னொரு பிரச்சனையை உருவாக்கியது. காசு கொடுத்து ஆரி தனக்கான ஆதரவை திரட்டித் தான் ஜெயித்தார் என அனிதா சம்பத் பேசியதாக ரசிகர்கள் அனிதா சம்பத் பக்கம் ஆயுதங்களை திருப்பினர்.

  ஆரிக்கே ஆதரவு

  ஆரிக்கே ஆதரவு

  ஆனால், நான் ஆரிக்கு எதிராக எந்தவொரு கருத்தையும் கூறவில்லை. மேலும், பாலா மற்றும் ஆரிக்கு எப்போதும் ஆதரவாகவே இருந்து வருகிறேன். ரவீந்திரன் தான் இந்த பிரச்சனையை இப்படி மடைமாற்றம் செய்துள்ளார் என அவருடன் பேசிய ஆடியோக்கள் சிலவற்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அனிதா சம்பத் ஷேர் செய்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.

  என்னாலதான் ஜெயிச்சாரு

  அந்த ஆடியோவில் என்னாலதான் ஆரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயிச்சாரு, 50வது நாளுக்கு பிறகு ஆரி பற்றிய நெகட்டிவ்களை வெளியே சொல்லாமல் மற்றவர்களின் நெகட்டிவ்களை அடுக்கியதன் காரணமாகத்தான் மக்கள் ஆரிக்கு ஓட்டுப்போட்டார்கள் என ரவீந்திரன் பேசிய ஆடியோவை அனிதா ஷேர் செய்ய இருவருக்கும் இடையே முட்டிக் கொண்டது.

  ஏன் தாமதம்

  ஏன் தாமதம்

  ஜனவரி 28ம் தேதி ஒரு மணிநேரம் 21 நிமிடங்கள் என்னுடன் பேசும் போது எடுத்த ஆடியோ ரெக்கார்டு இது, இதனை வெளியிட உங்களுக்கு 6 மாத காலம் ஆனது ஏன் அனிதா? உங்களுடைய உண்மையான சாயம் வெளுத்து விட்டது. பாலா இப்போத்தான் உங்களை பற்றிய கேவலமான உண்மைகளை என்னிடம் போனில் பேசினார் என ட்வீட் மூலம் அனிதாவுக்கு ரவீந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.

  அய்யோ வேண்டாம்

  அய்யோ வேண்டாம்

  ஆரி வெற்றிப்பெற்றது உங்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. வயிற்றெரிச்சல், நீங்களும் நானும் பேசிய ஆடியோவை விரைவில் வெளியிடுகிறேன் என ரவீந்திரன் மீண்டும் ட்வீட் போட, ஏற்கனவே அனைத்து பெண் போட்டியாளர்களின் அமைதியை காலி பண்ணது போதாதா? என் அமைதியையும் கெடுக்க வேண்டுமா? அந்த ஆடியோவை நான் லீக் பண்ணல.. பாலா தான் பண்ணான்.. தைரியம் இருந்தா அவனுடன் மோதுங்கள் எனக் கூறியுள்ளார்.

  அடுத்த சீசனுக்கு ஆயத்தமா

  அடுத்த சீசனுக்கு ஆயத்தமா

  பிக் பாஸ் தமிழ் சீசன் 4 முடிஞ்சு 6 மாசம் ஆகுது.. இப்போ ஏன் திடீர்னு இது போன்ற குப்பை சர்ச்சைகள் கிளம்புது என ரசிகர்கள் குழம்பித் தவித்து வருகின்றனர். மேலும், பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் ரவீந்திரன் போட்டியாளராக கலந்து கொள்ளவே அடுத்த பரபரப்பு சர்ச்சையை கிளப்பி வருகின்றனரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

  English summary
  Anitha Sampath and Libra productions Ravindran dirty phone audio fights leaked and stir controversy in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X