மொக்கை படங்கள் தான் தியேட்டரில் வருது...எந்த படத்தை சொல்றாரு ப்ளூ சட்டை மாறன்?

சென்னை : வழக்கமாக எந்த படம் வந்தாலும் அந்த படத்தின் பெயரை குறிப்பிட்டு வெளிப்படையாக கடும் விமர்சனத்தை பதிவிடும் ப்ளூ சட்டை மாறன் இன்று, பொதுவாக ஒரு ட்வீட்டை போட்டுள்ளார். இதனால் யாரை சொல்கிறார் என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

எந்த படம் ரிலீசானாலும், அது தியேட்டராக இருந்தாலும் சரி, ஓடிடி.,யாக இருந்தாலும் சரி விமர்சனம் செய்வதுடன் அந்த படம் பற்றி தொடர்ந்து ட்வீட் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன். வலிமை படத்தில் அஜித் பற்றி இவர் முன் வைத்த விமர்சனங்கள் கடும் எதிர்ப்புக்களை பெற்றன.

அஜித் கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

அஜித் கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

அஜித்தை பாடி ஷேமிங் செய்து இவர் பதிவிட்ட கருத்திற்கு சினிமா பிரபலங்கள் பலரும் சோஷியல் மீடியாவிலும், சினிமா விழாக்களிலும் வெளிப்படையாகவே எச்சரிக்கையும், கண்டனங்களையும் தெரிவித்தனர். ஆனாலும் வலிமை படத்தையோ, அஜித் மற்றும் அவரின் ரசிகர்களையும் ப்ளூ சட்டை மாறன் விடாமல் ட்விட் போட்டு வந்தார்.

அடுத்த குறி பீஸ்ட்டா

அடுத்த குறி பீஸ்ட்டா

அதே சமயம் சமீபத்தில் ஓடிடி.,யில் ரிலீசான டாணாக்காரன் படத்தை பாராட்டியும் ட்வீட் போட்டிருந்தார். பீஸ்ட், கேஜிஎஃப் 2 என படங்கள் பற்றிய ஒவ்வொரு விஷயங்களையும் பகிர்ந்து வந்தவர், பீஸ்ட் பற்றி நெட்டிசன்கள் பலர் போட்ட மீம்களையும் பகிர்ந்திருந்தார்.

மொக்கை படங்கள் தான் வருது

மொக்கை படங்கள் தான் வருது

இந்நிலையில் இன்று திடீரென, தியேட்டரில் கொண்டாடப்பட வேண்டிய சார்பட்டா பரம்பரை, ஜெய்பீம், டாணாக்காரன் போன்ற தரமான படங்கள் எல்லாம் ஓடிடி.,யில் வருகிறது. ஓடிடி.,யில் கூட பார்க்க முடியாத மொக்கை படங்கள் எல்லாம் தியேட்டருக்கு வருகிறது - உண்மையான சினிமா ரசிகர்கள் ஆதங்கம் என ட்வீட் போட்டிருந்தார்.

யாரை சொல்றார் ப்ளூ சட்டை மாறன்

யாரை சொல்றார் ப்ளூ சட்டை மாறன்

இதை பார்த்து விட்டு நெட்டிசன்கள், இவர் எந்த படத்தை சொல்கிறார். இவர் ஆன்டி இந்தியன் படத்தை சொல்றாரோ. நீங்க எதை சொல்லுறீங்க. கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லா இருக்கும். ஒரு வேளை பீஸ்ட் படத்தை தான் மறைமுகமாக சொல்றாரோ. அந்த நல்ல படங்கள் ஓடிடி.,யில் வந்ததால் தான் உலகமெங்கும் வாழும் அனைவராலும் அதை ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த குப்பைகளுக்காக திரையரங்கு செல்லத் தயாராக இல்லை. அதே போல் அவ்வாறான நல்ல படங்கள் எங்களின் ஊர்களுக்கெல்லாம் வராது என கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X