அடக்கடவுளே... விஸ்வாசம் படத்துக்கு இப்டி ஒரு புரோமோஷனா... யார் செய்த வேலைன்னு தெரியலையே!
சென்னை : அஜித்தின் விஸ்வாசம் படத்துக்காக யாரோ சிலர் வெளியிட்டுள்ள வீடியோ வாட்ஸ்அப்பில் வேகமாக பரவி வருகிறது.
விஸ்வாசம் படத்துக்காக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் நாள்தோறும் ஒரு புரோமோஷன், அதாவது விளம்பர நடவடிக்கையை செய்து வருகிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டர், பாடல்கள் என ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறுது.

நேற்று வெளியாக கண்ணானக் கண்ணே பாடலுக்கு கூட இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல அஜித், நயன்தாரா உள்ளிட்டோரின் லுக்கை விமர்சித்தும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் விஸ்வாசம் புரோமோஷன் வீடியோ என வாட்ஸ்அப்பில் பரவி வரும் வீடியோ ஒன்று செம காமெடியாக இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் பேனருடன் தொடங்கும் இந்த வீடியோவில் டிவி சீரியல் காட்சி இடம்பெற்றுள்ளன.
அதில் ஒரு பெண் விவேகம் என்றும், மற்றொரு பெண் விஸ்வாசம் என்றும் வசனம் பேசுகிறார். இத்ந வசனத்தை வைத்து தான் விஸ்வாசத்தை காமெடி செய்திருக்கிறார்.
யார் செய்த வேலை இது என தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோவை பார்த்து சிரிப்பது மட்டும் உறுதி.


Click it and Unblock the Notifications











