Ramayana: ராமருக்கே பட்ட நாமம் போட்டுட்டாய்ங்களே.. 2000 கோடி ராமாயணமா இது?.. ஆதிபுருஷ் 2.0!
சென்னை: சந்தீப் ரெட்டி வங்கா ரன்பீர் கபூரை கெத்தாக அனிமல் படத்தில் காட்டியது போல கூட காட்டாமல் எந்தவொரு தெய்வீக கலையும் இல்லாமல் ரன்பீர் கபூரை ஒரு அனிமேஷன் பொம்மை போல காட்டியுள்ளார் நித்திஷ் திவாரி என நெட்டிசன்கள் முதல் விமர்சகர்கள் வரை கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.
ஹனுமன் ஜெயந்திக்கு வெளியான ராமாயணா டீசரில் ஹனுமனையே காட்டாமல் விட்டதும் படக்குழுவுக்கு பேக் ஃபயர் ஆகிவிட்டது. 2000 கோடி பட்ஜெட் என்பதால், ஹாலிவுட் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக ஏகப்பட்ட ஹாலிவுட் படங்களில் வந்த வித்தியாசமான அரக்கர்களை காட்டியதும் டீசரின் மிகப்பெரிய பிழையாக மாறியுள்ளது.

பிரபாஸின் ஆதிபுருஷ் படம் பெட்டரா? ரன்பீர் கபூரின் ராமாயணா பெட்டரா? என விவாதம் நடத்தும் அளவுக்கு சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட மீம்களும், ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.
வெளுத்து வாங்கிய வெங்கி: விமர்சகர் வெங்கி தனது எக்ஸ் பக்கத்தில், ராமாயணா டீசர் நல்லாவே இல்லை என்றும் VFX காட்சிகள் எல்லாம் ரொம்பவே பழைய டைப் பாணியில் சுமாராக உள்ளதாக கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். சில இடங்களில் ஏஐ பயன்படுத்தியிருப்பது போல அப்பட்டமாக தெரிகிறது. ரன்பீர் கபூரின் லுக் சில இடங்களில் ரொம்பவே சாலிட்டாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதுவும் டொங்கலாக மாறிவிட்டது என கழுவி ஊற்றியுள்ளார்.
4000 கோடி பட்ஜெட் நாக்கவுட்: ராமாயணா படத்தின் ஒவ்வொரு பார்ட்டும் 2000 கோடி பட்ஜெட்டுன்னு சொன்னாங்க. மொத்தம் 4000 கோடி பட்ஜெட்டில் உருவான படமா? இது என எண்ணத் தோன்றும் அளவுக்குத்தான் அதன் செட் வொர்க்கும், சிஜி வேலைப்பாடுகளும், அப்படியே ஏதோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதை போல மோசமாக உள்ளது என இந்த நெட்டிசன் கலாய்த்துள்ளார்.
ஆதிபுருஷ் 2.0: ஓம் ராவத் ஏற்கனவே பிரபாஸை வைத்து எடுத்த ஆதிபுருஷ் எனும் ராமாயணம் திரைப்படம் ரொம்பவே மோசமான விமர்சனங்களை சந்தித்த நிலையில், அதற்கு கொஞ்சமும் சலைக்காத வகையில் ரன்பீர் கபூரின் ராமாயணா உள்ளது என்றும் இது ஆதி புருஷ் 2.0 தான் என பாலிவுட் ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
ராஜமெளலி தான் காப்பாத்தணும்: பாலிவுட் இயக்குநர்கள் ராமாயணா, மகாபாரதத்தை தொடாமல் இருப்பதே நல்லது. எல்லாரும் ராஜமெளலி ஆகிவிட முடியுமா? வாரணாசி படத்தில் மகேஷ் பாபுவை எப்படி ராமராக காட்டப்போறாரு பாருங்க என்றும் ஏற்கனவே ராம்சரணை ஆர்ஆர்ஆர் படத்தில் காட்டிய ஃபீலிங் கூட இந்த மெகா பட்ஜெட் ராமாயணா படத்தில் ரன்பீர் முகத்தில் இல்லையே என பங்கம் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











