2.0 வசூல்-3 நாட்களில் ரூ. 200 கோடி, ஒரே நாளில் ரூ. 200 கோடி: சொல்கிறது லைகா
Recommended Video

சென்னை:2.0 படம் ரிலீஸான நான்கே நாட்களில் உலக அளவில் ரூ. 400 கோடி வசூல் செய்துள்ளது என்று தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த 2.0 படம் கடந்த 29ம் தேதி வெளியானது. படம் ரிலீஸான 3 நாட்களில் ரூ. 200 கோடி வசூலித்தது.
இந்நிலையில் 2.0 வசூலில் மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது.
ரூ. 400 கோடி
2.0 படம் ரிலீஸான நான்கே நாட்களில் உலக அளவில் ரூ. 400 கோடி வசூல் செய்துள்ளது என்று லைகா நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது. படம் ரிலீஸான 3 நாட்களில் ரூ. 200 கோடியும், 4வது நாளில் ரூ. 200 கோடியும் வசூல் செய்துள்ளதாம்.

நெகட்டிவ்
2.0 படத்தை பார்ப்பவர்களால் அதன் பிரமாண்டத்தையும், தொழில்நுட்பத்தையும் பாராட்டாமல் இருக்க முடியாது. ஷங்கர், ரஜினியை பிடிக்காதவர்களால் கூட படத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. அப்படி இருந்தும் 2.0 பொம்மை படம் என்று விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் நெகட்டிவை விட படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் அதிகம் கிடைத்துள்ளது பலமாக அமைந்துள்ளது.

தென்னிந்தியா
தென்னிந்தியா பக்கம் தான் 2.0 படம் பற்றி நெகட்டிவ் விமர்சனம் அதிகம் எழுந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதிலும் அந்த விமர்சனங்களை கிளப்பிவிட்டவர்கள் யார் என்று தெரிந்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை எல்லாம் பார்த்தும் பார்க்காதது போன்று ஷங்கர் பொறுமையாக உள்ளது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.

தென்னிந்திய படம்
அமெரிக்காவில் அதிகம் வசூல் செய்த தென்னிந்திய படம் என்ற சாதனை படைத்துள்ளது 2.0. ரங்கஸ்தலம் படத்தின் வசூல் சாதனையை நான்கே நாட்களில் முறியடித்துள்ளது 2.0 என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











