2018ல் ட்விட்டரில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் 2 இந்தியர்கள்: ஒன்று ரஹ்மான், இன்னொன்று...
Recommended Video

சென்னை: 2018ம் ஆண்டு ட்விட்டரில் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் உள்ளது.
2018ம் ஆண்டு நிறைவடைய இன்னும் ஒரு மாதமே உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு ட்விட்டரில் செல்வாக்கு மிக்க ஆண்கள் மற்றும் பெண்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
அந்த பட்டியலில் நம் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பெயரும் உள்ளது.

டிரம்ப்
ட்விட்டரில் செல்வாக்கு மிக்க ஆண்கள் பட்டியலில் இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் லியாம் பெய்ன் முதலிடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2வது இடத்தில் உள்ளார். பிரபல அமெரிக்க பாடகர் ஜஸ்டின் பீபர் 3வது இடத்தில் உள்ளார்.

ரொனால்டோ
ட்விட்டரில் செல்வாக்கு மிக்க ஆண்கள் பட்டியலில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா 4வது இடத்திலும், கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 5வது இடத்திலும் உள்ளனர்.
ரஹ்மான்
10 பெயர்கள் அடங்கிய இந்த பட்டியலில் இரண்டு இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர். ஒன்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன். மற்றொன்று இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் அமிதாபுக்கு 8வது இடமும், ரஹ்மானுக்கு 10வது இடமும் கிடைத்துள்ளது. தனக்கு இப்படி ஒரு கவுரவம் கிடைத்தது பற்றி ட்வீட் செய்துள்ளார் ரஹ்மான்.

கிம்
2018ம் ஆண்டு ட்விட்டரில் செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் அமெரிக்க பாடகி டெய்லர் ஸ்விப்ட் முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரி 2வது இடத்திலும், டிவி நடிகை கிம் கர்தாஷியன் 3வது இடத்திலும் உள்ளனர். பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸுக்கு 8வது இடம் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











