ஓமைகாட், கமலுக்காக இரண்டே 2 நிமிஷத்துக்கு ரூ. 2 கோடி செலவு செய்த ஷங்கர்
Recommended Video

சென்னை: இந்தியன் 2 படத்தில் 2 நிமிடம் வரும் செட்டுக்காக ஷங்கர் பெரிய தொகையை செலவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
2.0 படத்தை அடுத்து ஷங்கர் இயக்கும் படம் இந்தியன் 2. இந்தியன் படத்தை போன்றே இந்த படமும் மாஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்திற்கு செட் போடும் வேலை துவங்கியது என்று தகவல்கள் வெளியாகின.

இந்தியன் 2
இந்தியன் 2 படத்திற்காக பிரமாண்ட செட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஷங்கர் படத்தில் பிரமாண்டம் இல்லை என்றால் தான் ஆச்சரியம். அந்த பிரமாண்ட செட்டுக்கு எவ்வளவு செலவு செய்துள்ளார்கள் என்ற விபரம் தெரிய வந்து பலருக்கும் கண்ணை கட்டிவிட்டது. ஷங்கர் படம் என்றால் சும்மாவா?

2 நிமிடம்
ரூ. 2 கோடி செலவில் பிரமாண்ட செட் போடப்படுகிறதாம். இத்தனைக்கும் அந்த செட் காட்சி படத்தில் வெறும் 2 நிமிடம் தானாம். 2 நிமிடம் படத்தில் வரும் செட்டுக்காக ரூ. 2 கோடி. அடேங்கப்பா என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

கடைசி படம்
படங்களில் நடித்துக் கொண்டே மக்களுக்கு சேவை செய்வேன் என்று கூறிய கமல் ஹாஸன் தனது மனதை மாற்றிக் கொண்டுள்ளார். இந்தியன் 2 தான் கமல் நடிக்கும் கடைசி படம். இதனாலேயே படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல்வாதி கமல் படத்தில் என்னென்ன பன்ச் வசனம் எல்லாம் பேசப் போகிறாரோ?

அனிருத்
இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைப்பது உறுதியாகிவிட்டது. ரஜினியை அடுத்து கமல் படத்திற்கு இசையமைக்கிறார். அனிருத் முதல்முறையாகவும், கடைசி முறையாகவும் கமல் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











