அய்யோ, இந்த கமல் இப்படி அநியாயத்துக்கு திருந்திட்டாரே
Recommended Video

சென்னை: கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்களால் கமல் ஹாஸனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
கமல் ஹாஸன் சல்மான் கானை போன்றே கோபப்பட்டு கோட்டை கழற்றிப் போட்டதை பார்த்த பிக் பாஸ் 2 பார்வையாளர்களுக்கு அவர் மீது அதிருப்தி ஏற்பட்டது. ப்ரொமோ வீடியோவில் தாளிச்சுடலாம் என்று கமல் ஆவேசமாக கூறியபோது கூட நம்பிக்கை வரவில்லை.
ஆனால் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிஜமாகவே கமல் அட்டகாசம் செய்துவிட்டார்.

கமல்
கமல் மகத்தை தாளி தாளின்னு தாளிச்சபோதே அவர் மீது கூடுதல் மரியாதை வந்துவிட்டது. சல்மானை காப்பியடிக்காமல் நிஜமாகவே கோபப்பட்டார் கமல். அதிலும் குறிப்பாக பிக் பாஸின் செல்லக்குட்டியான ஐஸ்வர்யாவுக்கும் அவர் டோஸ் விட்டாரே அடடா அந்த காட்சிகளை பார்க்கவே ஆனந்தமாக இருந்தது. கமல் இப்படி கண்டிப்பார் என்று ஐஸ்வர்யா எதிர்பார்க்கவில்லை.

ஐஸ்வர்யா
இந்த வாரம் ரித்விகா சேவ் செய்யப்படுகிறார் என்று கூறிய கமல் வாரா வாரம் ஒரே ஆளையே சேவ் பண்ணுவதா, இந்த வாரம் வித்தியாசமாக இருக்கட்டும் என்று நச்சென்று கூறினார். அதை கேட்ட ஐஸ்வர்யாவுக்கு முகமே விளங்கவில்லை. இதை பார்த்த கமல் என்ன ஐஸ்வர்யா என்று கேட்டதற்கு, நான் லக்கி அதனால் வாராவாரம் சேவ் ஆகிறேன் என்று பசப்பினார் ஐஸ்வர்யா.

உலக நாயகன்
விதிமுறைகளை எல்லாம் மாற்றி பிக் பாஸ் ஐஸ்வர்யாவை காப்பாற்றியது தெரிந்தும் அவரை கமல் கண்டித்ததுடன், குத்திக் காட்டியது பார்வையாளர்களுக்கு பிடித்திருந்தது. சூப்பர் ஆண்டவரே, லவ் யூ என்று பலர் தெரிவித்தனர். இந்தி நிகழ்ச்சி போன்று இங்கு வேண்டாம் என்று கமல் விஜய் டிவியிடம் தெரிவித்ததாக கூறியபோதே பார்வையாளர்களை கவர்ந்துவிட்டார்.

பாராட்டு
இத்தனை வாரங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துவதற்காக நெட்டிசன்களிடம் ஏச்சும் பேச்சும் வாங்கினார் கமல். ஆனால் கடந்த 3 நாட்களாக கமலை நெட்டிசன்கள் கொண்டாடுகின்றனர். கமல் சார், இந்த ஆட்டம் இப்படியே தொடர்ந்தால் நன்றாக இருக்கும். பிக் பாஸையே எதிர்த்து கமல் ஐஸ்வர்யாவுக்கு குட்டு வைத்துவிட்டாருடோய் என்று பார்வையாளர்கள் குதூகலிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











