ப்ரியங்கா சோப்ரா பிறந்தநாள் கேக்கின் விலையை கேட்டால் தலையே சுத்திரும்

By Siva

Recommended Video

Priyanka Chopra Costly B'day Cake : கேக்கின் விலை ரூ. 3 லட்சமா?

நியூயார்க்: பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் பிறந்தநாள் கேக்கிற்கு கணவர் நிக் ஜோனஸ் ஓவராக செலவு செய்துள்ளார்.

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா கடந்த 18ம் தேதி தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார். நள்ளிரவில் அவர் பிரமாண்டமான கேக் வெட்டினார். அவர் அணிந்திருந்த உடையின் நிறத்திலேயே கேக்கும் இருந்தது.

Wow, Nick spends Rs. 3.45 lakh on Priyankas Bday cake

இந்நிலையில் கேக் குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. ப்ரியங்காவுக்கு தெரியாமல் நிக் அந்த கேக்கிற்கு ஆர்டர் கொடுத்துள்ளார். அதுவும் கடைசி நேரத்தில் ஆர்டர் கொடுத்துள்ளார். சாக்லேட் மற்றும் வெனிலா சுவை அடங்கிய அந்த கேக்கின் விலை ரூ. 3 லட்சத்து 45 ஆயிரம் மட்டுமே.

நள்ளிரவில் ப்ரியங்கா சிவப்பு நிற உடை அணிவார் என்பதால் கேக்கும் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும் என்றாராம் நிக். மேலும் ப்ரியங்காவுக்கு தங்க நிறம் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் கேக்கிலும் தங்க நிறம் இருக்கும்படி பார்த்துக் கொண்டுள்ளார் நிக்.

Wow, Nick spends Rs. 3.45 lakh on Priyankas Bday cake

நள்ளிரவில் கேக் வெட்டிய பிறகு மறுநாள் மயாமியில் படகில் சவாரி செய்து பிறந்தநாளை கொண்டாடினார் ப்ரியங்கா. அப்பொழுது அவர் சிகரெட் பிடித்த புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையானது. ப்ரியங்காவுக்கு இப்பொழுது மட்டும் ஆஸ்துமா குணமாகிவிட்டதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

கடந்த ஆண்டு திருமணம் முடிந்ததில் இருந்து ப்ரியங்கா தனது கணவர் நிக் ஜோனஸுடன் பார்ட்டிகளுக்கு சென்று கொண்டிருக்கிறார். அடிக்கடி கணவருடன் ஏதாவது ஒரு நாட்டிற்கு சுற்றுலா செல்கிறார். கணவனும், மனைவியும் காசை தண்ணீராக செலவு செய்கிறார்கள்.

Wow, Nick spends Rs. 3.45 lakh on Priyankas Bday cake

ப்ரியங்கா பணத்தை ஓவராக செலவு செய்து, எப்பொழுது பார்த்தாலும் பார்ட்டிக்கு செல்வது நிக் ஜோனஸுக்கு பிடிக்கவில்லை என்று முன்பு செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படி எதுவும் இல்லை என்று ப்ரியங்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

நிக் ஜோனஸ் தனது மனைவியை அசத்த விலை உயர்ந்த கார் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ப்ரியங்கா தனது கணவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து அதை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X