Don't Miss!
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிக் பாஸ் 13-ஐ தொகுத்து வழங்க சல்மானுக்கு ரூ. 400 கோடிப்பு: அப்போ நம்ம கமலுக்கு?
மும்பை: இந்தி பிக் பாஸின் 13வது சீசனை தொகுத்து வழங்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் ரூ. 403 கோடி சம்பளம் வாங்குகிறாராம்.
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் நேற்று துவங்கியுள்ளது. முதல் இரண்டு சீசன்களை போன்றே இந்த சீசனையும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாஸன் தொகுத்து வழங்குகிறார்.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 13வது சீசன் வரும் செப்டம்பர் மாதம் 29ம் தேதி துவங்க உள்ளது. இந்த சீசனுக்கு வில்லங்கமான ஆட்களையாக தேர்வு செய்து போட்டியாளர்களாக அனுப்புகிறார்களாம்.
போட்டியாளர்கள்
பிற மொழிகளில் பிக் பாஸ் சீசன் துவங்குகிறது என்றால் போட்டியாளர்கள் யார், யார் என்பது குறித்து தான் ரசிகர்கள் அதிகம் பேசுவார்கள். ஆனால் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்குகிறது என்றால் இந்த சீசனில் சல்மான் கானுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப் போகிறார்களோ என்று தான் பேசுவார்கள்.
சல்மான் கான்
பிக் பாஸ் 13 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான் கானுக்கு எவ்வளவு சம்பளம் என்பது தெரிய வந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் தொகுத்து வழங்க சல்மான் கானுக்கு வாரத்திற்கு ரூ. 31 கோடி சம்பளமாம். ஆக 26 எபிசோடுகளுக்கு மொத்தம் ரூ. 403 கோடி சம்பளம் பேசி முடிக்கப்பட்டுள்ளதாம்.
பணம்
ஒவ்வொரு சீசனுக்கும் சல்மான் கானின் சம்பளம் தான் எகிறிக் கொண்டே போகிறது. சல்மானுக்கு ரூ. 403 கோடி என்றால் நம்ம உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு எத்தனை கோடி சம்பளம் என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழாமல் இல்லை.
பிடிக்கவில்லை
பிக் பாஸ் 13 குறித்து சல்மான் கான் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, பிக் பாஸ் 13 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என்று நான் கூறியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. எனக்கு பிக் பாஸ் நடக்கும் முறை பிடிக்கவில்லை. ஆனால் என்டமோல் மற்றும் கலர்ஸ் சிலரை போட்டியாளர்களாக தேர்வு செய்து பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்புகிறார்கள். அவர்களை எல்லாம் நான் டீல் செய்ய வேண்டி உள்ளது. சில நேரம் பிடிக்கும், சில நேரம் பிடிக்காது. ஆனால் போட்டியாளர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன் என்றார்.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே