Sara Ali Khan: ஏய் எப்புட்றா.. 2 வாரத்தில் தொந்தி போயே போயிந்தி.. சாரா அலி கான் செஞ்ச மேஜிக்!
மும்பை: நடிகர் தனுஷ் இந்தியில் நடித்த அட்ரங்கி ரே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த சாரா அலி கான் பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் முதல் மனைவிக்கு பிறந்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டில் நெப்போடிசம் கொடி கட்டிப் பறந்து வருவதாக பல விமர்சனங்கள் கிளம்பினாலும், வாரிசு நடிகைகள் தான் தற்போது பாலிவுட்டை ஆக்கிரமித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்து வருகின்றனர்.

சிறு வயதில் இருந்தே குண்டாக இருந்த சாரா அலி கான் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு ஜோடியாக பாலிவுட்டில் கேதார்நாத் படத்தில் அறிமுகமாக தனது உடல் எடையை டோட்டலாக குறைத்து இருந்தார்.
மீண்டும் போட்ட தொப்பை: உடல் பருமனானவர்கள் கொஞ்சம் டயட்டை ஃபாலோ செய்யாமல் விட்டாலும், உடற்பயிற்ச்சியை விட்டாலும் டபக்கென தொப்பை மீண்டும் வந்து விழுந்து விடும். நடிகை சாரா அலி கானும் சமீபத்தில், புதிய படங்களில் நடிக்காமல் பிரேக் எடுத்திருந்த நிலையில், பருமனாகி விட்டதாக ரொம்பவே ஃபீல் பண்ணி உள்ளார். அப்போது யோகா மேட்டில் அவர் வயிற்று தொப்பையை பிடித்துக் கொண்டு வருத்தத்துடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
2 வாரத்தில் சூப்பர் ஸ்லிம்: ஆனால், அதிரடியாக டயட் மற்றும் கடுமையான வொர்க்கவுட் செய்து ஒரே அடியாக தனது தொப்பையை குறைத்து விட்டதாக செம ஹேப்பியாக நடிகை சாரா அலி கான் பதிவிட்டுள்ள போஸ்ட் அனைத்து ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. எப்படிங்க 2 வாரத்தில் இப்படியொரு டிரான்ஸ்ஃபர்மேஷன் பண்ணீங்க என ஏகப்பட்ட ரசிகர்கள் அவரிடம் டிப்ஸ் கேட்டு வருகின்றனர்.
படத்திற்காகவா?: இறுகப்பற்று படத்தில் நடிகை அபர்ணதி உடல் பருமனாகி மீண்டும் குறைத்து நடித்திருப்பார். ஏற்கனவே நடிகை அனுஷ்கா உடல் எடையை இஞ்சி இடுப்பழகி படத்திற்காக ஏற்றி விட்டு குறைக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். இந்நிலையில், அதே போல புதிய படத்துக்காக இப்படி உடல் எடையை அதிகரித்து குறைத்துள்ளாரா? சாரா அலி கான் என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு தனது கட்டழகை கச்சிதமாக சாரா அலி கான் காட்டி உள்ளார்.


Click it and Unblock the Notifications











