சிவகார்த்திகேயனுக்காக இணையும் சர்கார் கூட்டணி!
சிவகார்த்திகேயனின் எஸ்கே14 திரைப்படத்தில் பாடலாசிரியர் விவேக் பாடல் எழுதுகிறார்.
Recommended Video

சென்னை: எஸ்கே 14 திரைப்படத்தில் பாடல் எழுத பாடலாசிரியர் விவேக் ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயனின் சீம ராஜா திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில், இப்போது இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது சீமராஜாவின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளன.

பாஸ் என்கிற பாஸ்கரன் இயக்குனர் ராஜேஷ் இயக்கும் திரைப்படத்திலும், இன்று நேற்று நாளை திரைப்பட புகழ் இயக்குனர் ரவிக்குமாரின் இயக்கத்திலும் நடித்து வருகிறார்.
ரவிக்குமார் இயக்கும் திரைப்படம் சயின்ஸ் பிக்ஷன் படமாக தயாராகி வருகிறது. 24ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்டி.ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஏஆர்.ரகுமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஏஆர்.ரகுமானின் இசையில் சிவகார்த்திகேயனின் பதினான்காவது படத்திற்கு மெர்சல் புகழ் பாடலாசிரியர் விவேக் பாடல் எழுதுகிறார். அந்த தகவலை விவேக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மெர்சல் திரைப்படத்திற்குப் பிறகு விஜய்யின் சர்கார் படத்திற்கு பாடல் எழுத ஒப்பந்தமாகிய நிலையில், சிவகார்த்திகேயனுக்கும் பாடல் எழுதுவது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் பாடலாசிரியர் விவேக் மூன்றாவது முறையாக ரகுமானுடன் இணைகிறார்.
எனக்குள் ஒருவன் திரைப்படத்தில் சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடலாசிரியராக அறிமுகமான விவேக், இன்று தனக்குள் ஒரு திறமையான பாடலாசிரியன் இருக்கிறான் என்பதை நிரூபித்து முன்னேறி வருகிறார். வாழ்த்துக்கள் விவேக்!


Click it and Unblock the Notifications











