இடுப்பை ஆட்டியே இளைஞர்களை சூடேற்றிய ஷகிரா.. இப்போ புதுசா என்ன பண்ணியிருக்காங்க தெரியுமா?

கொலம்பியா: ஷகிரா என்றதுமே எல்லாருக்கும் அந்த இடுப்பை அப்படி ஆட்டி நடனம் ஆடும் Hips Don't Lie பாடல் காட்சிகள் தான் நினைவுக்கு வரும்.

உலகளவில் பிரபலமான பிரபல ராப் இசைக் கலைஞர் ஷகிராவின் லேட்டஸ்ட் பிகினி புகைப்படங்கள் இணையத்தை தெறிக்கவிட்டுள்ளன.

அதிலும், அவர் குறிப்பிட்டுள்ள ஒரு ஸ்பெஷல் விஷயம் தான் ரசிகர்களை வாய் பிளந்து பார்க்க வைத்திருக்கிறது.

ஷகிரா

ஷகிரா

கொலம்பியாவின் பாரன்குலா மாகாணத்தில் பிறந்தவர் ஷகிரா. பிரபல பாடகி, பாடலாசிரியர், நடனக் கலைஞர் மற்றும் நடிகை என ஏகப்பட்ட திறமைகளை கொண்டவர் ஷகிரா. உலகம் முழுவதும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 43 வயதிலும் இன்னும் இளமை மாறாமல் செம ஹாட்டாக இருக்கிறார்.

பிரபல பாடல்கள்

பிரபல பாடல்கள்

ஷகிராவின் பெயரை உலகம் முழுக்க பரவச் செய்தது அந்த இடுப்பாட்டும் Hips Don't Lie பாடல் தான். இடுப்பு ஒரு போதும் பொய் சொல்வது இல்லை என அவர் ஒவ்வொரு முறையும் பாடி பாடி, இடுப்பை ஆட்டி ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்து விட்டார். 2010ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலக கால்பந்தாட்ட போட்டிக்காக அவர் பாடிய வாக்கா வாக்கா பாடலும் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

68 மில்லியன் ரசிகர்கள்

68 மில்லியன் ரசிகர்கள்

இன்ஸ்டாகிராமில் இவருக்கு 68 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பதிவிடும் பாடல் காட்சிகளுக்கும், நடன அசைவுகளுக்கும், செக்ஸியான போட்டோஷூட் புகைப்படங்களையும் ஏகப்பட்ட ரசிகர்கள் வாய் பிளந்து பார்த்து மில்லியன் கணக்கில் லைக்குகளை தட்டி வருகின்றனர்.

பிகினி உடையில்

பிகினி உடையில்

இந்நிலையில், தற்போது புதுவிதமான பிகினி உடையை அணிந்து கொண்டு ஷகிரா பதிவிட்டுள்ள புகைப்படங்கள், இணையத்தின் ஹீட்டை அதிகரித்தே விட்டன. லாவண்டர் நிறத்தில் நூடுல்ஸ் போல தொங்கும் உள்ளாடையை அணிந்து கொண்டு, இதுதான் தனது புதிய குளியல் ஆடை என அவர் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.

சொந்த டிசைன்

சொந்த டிசைன்

மேலும், இந்த பிகினி உடையின் டிசைனை நடிகை ஷகிராவே சொந்தமாக உருவாக்கியதாகவும், அதனை ஆடையாக வடிவமைத்து Bego நிறுவனம் இவருக்கு கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். சொந்தமா பாட்டு எழுதி பாட மட்டுமல்ல, ஃபேஷன் டிசைன்களையும் தன்னால் சொந்தமா உருவாக்க முடியும் என பதிவு போட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் ஷகிரா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X