twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாவ்... என்னதான் வளர்ந்துவிட்டாலும் சீனியர்களை மதிக்கும் சிவகார்த்திகேயன்!

    By Shankar
    |

    Recommended Video

    காவிரிக்காக திரையுலகினர் மவுன போராட்டம் - வீடியோ!

    சென்னை: காவிரிக்காக நடிகர் சங்கம் உள்ளிட்ட திரைப்பட அமைப்புகள் சில மணி நேரம் நடத்திய அடையாள மவுனப் போராட்டம் குறித்து ஏகப்பட்ட எதிர்மறைக் கமெண்டுகள் பறக்கின்றன மீடியாவில்.

    ஆனால் இத்தனைக்கும் மத்தியில் ஒரு நடிகரின் செயல் பார்வையாளர்களின் கவனம் ஈர்த்தது. அவர்தான் சிவகார்த்திகேயன்.

    Wow.. Sivakarthikeyan gets viewers appreciation for his gentle gesture

    சிவகார்த்திகேயன் நேற்று ரஜினிக்குப் பக்கத்தில் அமரும் வாய்ப்பைப் பெற்றார். அதற்கடுத்த இருக்கைகளில் விஜய், தனுஷ் போன்றவர்கள் இருந்தனர். ஆர்ப்பாட்டப் பந்தலிலிருந்து இளையராஜா கிளம்புவதாக ரஜினியிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டார். அப்போது அவரை இடைமறித்த மூத்த இயக்குநர் எஸ்பி முத்துராமன், ரஜினி கமலுக்கு நடுவில் ராஜாவை நிறுத்து புகைப்படம் எடுத்துக் கொள்ளச் சொன்னார்.

    அப்போது ரஜினிக்குப் பக்கத்தில் நின்றிருந்தவர் சிவகார்த்திகேயன். அவர் உடனே சுற்றும் முற்றும் பார்த்தார். ஒரு இருக்கை தள்ளி நின்ற விஜய்யை தானே கையைப் பிடித்து அழைத்து ரஜினிக்குப் பக்கத்தில் நிறுத்தினார். இன்னும் சற்றுத் தள்ளி நின்ற தனது நண்பர் தனுஷையும் அழைத்தார். அவர் மறுத்தாலும் விடாமல் அழைத்து விஜய்க்குப் பக்கத்தில் நிறுத்திவிட்டு, தான் தள்ளி நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

    சிவகார்த்திகேயனின் இந்த செயலைப் பார்த்து பார்வையாளர்கள் கைத்தட்டினர். தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைத் தவற விடாமல் பிடித்துக் கொள்ளும் நடிகர்களுக்கு மத்தியில், சீனியர் நடிகர்களுக்கு உரிய மரியாதை அளித்து அவர்களை சாதனையாளர்களுக்குப் பக்கத்தில் நிற்க வைத்த சிவகார்த்திகேயன் ரசிகர் மனங்களில் உயர்ந்துவிட்டார்.

    English summary
    In Yesterday's Cauvery Protest Sivakarthikeyan got viewers attention by givibg due respect to his seniors like Vijay and Dhanush on the stage.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X