அப்படி இருந்த சூரியா இப்படி ஆகிவிட்டார்: வியக்கும் பிரபலங்கள், ரசிகர்கள்
Recommended Video

சென்னை: இந்த 10 ஆண்டுகளில் சூரியின் மாற்றத்தை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை.
10 இயர் சவாலை ஏற்று பிரபலங்கள் பலரும் தங்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நகைச்சுவை நடிகர் சூரி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.

1999ம் ஆண்டில் நடிக்க வந்தபோதிலும் 2009ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் தான் சூரி பிரபலமானார். அந்த படத்தில் அவர் பரோட்டா சாப்பிடும் காட்சியை மறக்கத் தான் முடியுமா.
வெண்ணிலா கபடிக்குழு படம் ரிலீஸாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் அவர் அந்த படத்தின் இயக்குனர் சுசீந்திரன், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சூரி வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து பிரபலங்களும், ரசிகர்களும் செம, மாஸ், சான்ஸே இல்லை, சூப்பர் என்று கமெண்ட் போட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











