Valimai Motion Poster: எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. இன்று மாலை 6 மணிக்கே தல ’வலிமை’யா வராரு!
சென்னை: கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தல ரசிகர்கள் காத்திருந்த அந்த தருணம் இன்று மாலை 6 மணிக்கு நிகழப் போவதாக ஷாக்கிங் சர்ப்ரைஸ் அப்டேட் கிடைத்துள்ளது.
Recommended Video
இயக்குநர் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் உடன் இன்று மாலையே வெளியாகப் போகிறதாம்.
ஜூலை 15ம் தேதி தான் ஃபர்ஸ்ட் லுக் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தல ரசிகர்களுக்கு வலிமை திருவிழா முன்கூட்டியே ஆரம்பமாகப் போகிறது.

இன்றே திருவிழா
வரும் ஜூலை 15ம் தேதி தான் தல அஜித்தின் வலிமை ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று மாலை 6 மணிக்கே வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகப் போகிறது என்கிற அட்டகாசமான அப்டேட் கிடைத்துள்ளது.

திருவிழா ஸ்டார்ட்
வலிமை திருவிழாவை இன்று மாலையில் இருந்தே அஜித் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பிக்க உள்ளனர். இந்த லேட்டஸ்ட் வலிமை அப்டேட் அஜித் ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒட்டுமொத்த தல ரசிகர்களும் டிரெண்டிங்கை தெறிக்க விட தயாராகி வருகின்றனர்.

நம்பலாமா
இதுதொடர்பாக தயாரிப்பாளர் போனி கபூர் எந்தவொரு ட்வீட்டும் போடாத நிலையில், ஏகப்பட்ட ஃப்ளூ டிக் ஐடிக்கள் இந்த செய்தியை உறுதி செய்துள்ளன. அதனால், அஜித் ரசிகர்கள் இதனை நம்பலாமா? வேண்டாமா? என லேசான மனக் குழப்பத்திலும் உள்ளனர்.

ஷாக்கிங் சர்ப்ரைஸ்
எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள் என்பது போல இன்று மாலை தல அஜித்தின் வலிமை ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானால் அது நிச்சயமாக அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் ஷாக்கிங் சர்ப்ரைஸ் ஆகத்தான் இருக்கும்.

விக்ரமுக்கு போட்டியாக
நேற்று நடிகர் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடிப்பில் உருவாக உள்ள விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், தற்போது அதற்கு போட்டியாக உடனடியாக இந்த மோஷன் போஸ்டரை வெளியிடுகின்றனரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications