வாவ், வவ்வாவ்: அட்லீ படத்தில் விஜய் என்னவாக நடிக்கிறார் தெரியுமா? #Thalapathi63
Recommended Video

சென்னை: தளபதி 63 பற்றி புதிய தகவல் கிடைத்துள்ளது.
தெறி, மெர்சல் ஆகிய வெற்றிப் படங்களை அடுத்து அட்லி, விஜய் ஒன்று சேர்ந்துள்ள படம் தளபதி 63. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
இந்நிலையில் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்
தளபதி 63 ஸ்போர்ட்ஸ் டிராமா படம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிப்பது தெரிய வந்துள்ளது. படத்தில் அவர் 16 பெண்களுக்கு பயிற்சி அளிக்கிறாராம்.

பயிற்சி
16 பெண்கள் கொண்ட அணிக்கு கால்பந்து பயிற்சி அளிக்கும் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பது இதுவே முதல் முறை. 16 பெண்களும் புதுமுகங்களாம். நேர்முகத் தேர்வு வைத்து 16 பெண்களையும் தேர்வு செய்துவிட்டாராம் அட்லி.

கனா
கனா படத்தில் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் பயிற்சியாளராக நடித்திருந்தார். அந்த படத்தை பார்த்தவர்கள் சிவகார்த்திகேயனை புகழ்ந்து தள்ளினார்கள். இந்நிலையில் விஜய்யும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் கோச்சாக அவதாரம் எடுக்கிறார்.

முதல் முறை
முதல்முறையாக விஜய் பயிற்சியாளராக நடிப்பதை பார்க்க ஆவலாக உள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆவல் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











