வாவ்... என்ன மாதிரியான படம்... 83 படத்தை பாராட்டித் தள்ளிய சூப்பர்ஸ்டார்!
சென்னை : 83 படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வசூல் சாதனை புரிந்து வருகிறது.
இந்தப் படத்தை பார்த்த அனைவரும் சிறப்பான விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் சிறப்பான பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே சூப்பர்ஸ்டார் மற்றும் தலைவர் என கொண்டாடப்பட்டு வருகிறார். 70 வயதை கடந்து தற்போதும் தன்னுடைய படங்களின்மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதற்கு சமீபத்திய உதாரணம் அண்ணாத்த படம்.

அண்ணாத்த படம்
இந்தப் படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. சிவா இயக்கத்தில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த நிலையில் இந்திய அளவில் அதிக வசூலை பெற்றது.

சிறந்த படங்களுக்கு பாராட்டு
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிறப்பான படங்கள், சிறந்த நடிப்பு உள்ளிட்டவற்றிற்கு தொடர்ந்து பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார். சிலரை நேரில் அழைத்தும், தொலைபேசி வாயிலாகவும் ட்விட்டர் மூலம் அவரது பாராட்டுக்கள் தொடர்ந்து வருகின்றன.
Recommended Video

பாரதிராஜா, வசந்த் ரவிக்கு பாராட்டு
சமீபத்தில் ராக்கி படத்தில் சிறப்பான வகையில் நடிப்பை வெளிப்படுத்தியிருந்த பாரதிராஜா மற்றும் வசந்த் ரவி இருவரையும் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருந்தார். இதுகுறித்து படத்தை வெளியிட்ட ரவுடி பிக்சர்சின் விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

83 படத்திற்கு பாராட்டு
இந்நிலையில் தற்போது 83 படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். வாவ், என்ன மாதிரியான படம் என்று தெரிவித்துள்ள அவர், தயாரிப்பாளர்களுக்கும் படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகளுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். குறிப்பாக கபீர்கான், கபில்தேவ், ரன்வீர் சிங் மற்றும் ஜீவா ஆகியோரின் பெயர்களை அவர் டேக் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











