WWE ஆடா நடத்துறீங்க.. பாலாவின் வர்மா பாடல் காட்சியை பங்கம் பண்ணிய நெட்டிசன்ஸ்.. பாவம் துருவ்!

சென்னை: பாலாவின் வர்மா படம் இன்று ஒருவழியாக ஒடிடியில் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு சிம்ப்ளி சவுத் வேலை செய்யாத நிலையில், தமிழ் ராக்கர்ஸில் வெளியாகி உள்ள வர்மா படத்தை பார்த்த நெட்டிசன்கள், அதனை வச்சு செய்து வருகின்றனர்.

மேலும், ஒரு பாடல் காட்சியில் துருவ் விக்ரமும், நாயகி மேகா செளத்ரியும் தாவி தாவி ரொமான்ஸ் செய்யும் காட்சியை WWE மியூசிக் போட்டு மரண பங்கம் செய்துள்ளனர்.

வர்மா டிரெண்டிங்

சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவான வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருந்தார். ஆனால், அந்த படம் தரமாக இல்லை என்பதால், படத்தை அப்படியே டிராப் பண்ணிவிட்டு, ஆதித்ய வர்மா படத்தின் மூலம் அறிமுகமானார். இந்நிலையில், ஒடிடியில் இன்று வெளியான வர்மா படம் #Varmaa என டிரெண்டாகி வருகிறது.

ஹாட் ரைசா

ஆதித்ய வர்மா படத்தில் சினிமா ஹீரோயின் கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த் நடித்திருப்பார். அவருக்கு முன்னதாக தமிழ் அர்ஜுன் ரெட்டி வெர்ஷனில் நடிகையாக நடித்தது நம்ம பிக்பாஸ் ரைசா வில்சன் தான். துருவ் விக்ரமுடன் கட்டிப் பிடித்து, ஆடைகளை கழட்டி முத்தம் கொடுக்கும் ஹாட் சீன்களின் புகைப்படங்கள் வைரலாக பகிரப்பட்டு டிரெண்டாகின்றன.

தமிழ்ராக்கர்ஸ் தயவால்

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பாலாவின் வர்மா படத்தை ஒடிடியில் வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழ் ராக்கர்ஸ் கசியவிட்டுள்ளது. அதனை டவுன்லோடு செய்து பார்த்த ரசிகர்கள், தற்போது வர்மா படத்தை மீம் போட்டும், ட்ரோல் செய்தும் ஓட்டி வருகின்றனர். சிலர், ஆதித்ய வர்மா படத்துக்கு இந்த படம் பரவாயில்லை எனவும் பாலாவை பாராட்டி உள்ளனர்.

என்ன WWEலாம் வருது

வர்மா படத்தின் பாடல் காட்சி வீடியோ ஒன்று தான் தற்போது சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. அந்த பாடல் காட்சியில், நாயகன் துருவ் விக்ரமும், நாயகி மேகா செளத்ரியும் படுக்கையறையில் பாய்ந்து பாய்ந்து காதலிக்கும் காட்சியை, WWE வாய்ஸ் கொடுத்து பங்கம் பண்ணி உள்ளனர்.

பாவம் துருவ் விக்ரம்

தெரியாத்தனமா அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்பட்டுட்டார் துருவ் விக்ரம் பாவம். ஒருவருக்கு, தொடர்ந்து இரண்டு படு தோல்விகள் ஒரே படத்தின் ரீமேக் மூலம் என வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். நல்ல வேளை சியான் விக்ரம் சார் இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இதனை இப்பவும் ரிலீஸ் பண்ணாமலே இருந்திருக்கலாம் என கமெண்ட்டுகள் குவிகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X