twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் குறும்படத்தை உல்டாவாக்கி ஓடிடிக்கு விற்று விட்டார்கள்.. பிரபல இயக்குனர் மீது எழுத்தாளர் புகார்

    By
    |

    சென்னை: என் கதையை திருடி படமாக எடுத்துவிட்டார்கள் என்று பிரபல இயக்குனர் மீது வசனகர்த்தாவும் இயக்குனருமான அஜயன் பாலா புகார் கூறியுள்ளார்.

    அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேற்று வெளியான ஆந்தாலஜி படம், புத்தம் புது காலை.

    கொரோனா லாக்டவுன் கான்செப்டை வைத்து ஐந்து இயக்குனர்கள் இயக்கிய ஐந்து குறும்படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

    போதைப் பொருள் வழக்கு.. விசாரணைக்கு ஆஜராகவில்லை.. பிரபல நடிகர் மனைவிக்கு மீண்டும் சம்மன்!போதைப் பொருள் வழக்கு.. விசாரணைக்கு ஆஜராகவில்லை.. பிரபல நடிகர் மனைவிக்கு மீண்டும் சம்மன்!

    கார்த்திக் சுப்புராஜின் மிராக்கிள்

    கார்த்திக் சுப்புராஜின் மிராக்கிள்

    சுதா கொங்கராவின் இளமை இதோ இதோ, கவுதம் வாசுதேவ் மேனனின், அவரும் நானும் அவளும் நானும், சுகாசினி மணிரத்னம் இயக்கி இருக்கும் காஃபி எனி ஒன்?, ராஜீவ் மேனனின் ரியூனியன், கார்த்திக் சுப்புராஜின் மிராக்கிள். இந்த ஐந்து குறும்படத்தை ஒன்றாக்கி பெரும்படமாக்கி இருக்கிறார்கள்.

    காப்பி அடித்து

    காப்பி அடித்து

    இந்நிலையில் இதில் இடம்பெற்றுள்ள, மிராக்கிள் படம், தனது ஷார்ட் பிலிமை அப்படியே காப்பி அடித்து எடுத்துள்ளதாக வசனகர்த்தாவும் எழுத்தாளருமான அஜயன்பாலா கூறியுள்ளார்.
    இதுபற்றி அவர் சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நண்பர் இலங்கைவேந்தன் நேற்று போன் செய்து உடனே அமோசானில் 'புத்தம் புதுக்காலை' படம் பாருங்க என பதட்டத்துடன் சொன்னார்.

    சுட்டுவிட்டார்கள்

    சுட்டுவிட்டார்கள்

    என்ன என கேட்டபோது, அவர் சொன்ன தகவல் ஷாக்காக இருந்தது. அந்தப் படத்தில் கடைசியாக வரும் மிராக்கிள் படம் அப்படியே நான், நடிக நிலம் நடிப்புப் பயிற்சி மாணவர்களுக்காக கடந்த வருட இறுதியில் உருவாக்கி கொரானாவால், போஸ்ட் புரொடக்‌ஷன் தாமதமாகி, கடந்த மாதம் யூ ட்யூபில் வெளியானது, என் சச்சின் கிரிக்கெட் கிளப் குறும்படம்.

    அப்படியே இருக்கிறது

    அப்படியே இருக்கிறது

    இதன் கதையை அப்படியே சுட்டுவிட்டார்கள் என்றார் அவர். நானும் இரவே பார்த்தேன். என் கதையில் பத்து பேர், அவர்கள் கதையில் இரண்டு பேர். கதைக்களம் பகல், அதில் இரவு . மற்றபடி பேராசை பெருநட்டம் எனும் என் கதைக்கருவும் பணத்தேவைக்காக தவறு செய்யப்போய், இருக்கும் பணத்தை, கோட்டை விடுவதுமான கதை அமைப்பும் இறுதியில் டம்மி பணம் எனும் கதையின் முக்கிய திருப்பம், கிளைமாக்சாக அமைந்திருப்பதும் அப்படியே இருக்கிறது.

    உல்டா அடித்து

    உல்டா அடித்து

    படத்தில் நடித்துள்ள பாபி சிம்ஹா என் நட்பு வட்டத்தில் இருப்பவர். பன்னிரண்டு வருடமாக நன்கு பழகியவர். இதை சட்டப் பூர்வமாக எதிர்கொள்ள வழி இருக்கிறதா தெரியவில்லை. ஒரு ஷார்ட் ஃபிலிமின் முக்கிய தகுதியே தனித்த ஐடியாதான். இருபது வருடமாக போராடி படம் இயக்க முடியவில்லை, சரி ஒரு ஷார்ட் ஃபிலிமாவது எடுக்கலாம் என்று பார்த்தால் அதையும் உல்டா அடித்து ஓடிடிக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் அளவுக்கு தமிழில் கதை பஞ்சமா?

    மொக்கை காட்சி

    மொக்கை காட்சி

    எத்தனை சிறுகதைகள் கொட்டிக் கிடக்கிறது, எத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் . இவர்களுக்கு ஏன் ஒரு எழுத்தாளனின் கதையை பயன்படுத்தும் எண்ணம் வருவதில்லை . இது சினிமாவுக்கு ஆரோக்கியமானதல்ல. சரி, சுட்டார்களே ஒழுங்காகவாவது திரைக்கதை அமைத்தார்களா என்றால் அதுவும் இல்லை. ஒரு டயரை, திருடப்போகும் வீட்டிலும் சுமந்து செல்லும் லாஜிக் இல்லாத மொக்கை காட்சியெல்லாம் ஒரிஜினலாக சிந்திக்கும் படத்தில் வரவே வராது . இவ்வாறு கூறியுள்ளார்.

    English summary
    Writer Ajayan Bala has complained to director Karthik subbaraj that the story of his short film has been stolen.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X