Bava Chelladurai: பிக்பாஸ் பிரபலம் பவா செல்லதுரைக்கு இதய அறுவை சிகிச்சை!
சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்ட நிலையில் துவக்க ஆட்டக்காரர்களாக 18 பேர் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்திருந்தனர். இதில் எழுத்தாளர் பவா செல்லதுரையும் ஒருவர். எழுத்தாளரான இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டது தவறு என்று முன்னதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால் பவா செல்லதுரை மீது அதிக கவனம் குவிந்தது. இந்த நிகழ்ச்சியில் இவர் தொடர்ந்து தாக்கு பிடிப்பாரா என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கு ஏற்றாற்போல, பவா செல்லதுரை சில தினங்கள் கூட நிகழ்ச்சியில் தாக்கு பிடிக்க முடியவில்லை. நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறினார். முன்னதாக நிகழ்ச்சியில் பவா செல்லதுரை கூறிய கதை சிலரை கண்கலங்க செய்தது. மேலும் பெண்களை சமையலறையில் முடக்குவது குறித்த இவரின் பேச்சு விவாதத்திற்கு உள்ளானது. தொடர்ந்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு பவா செல்லதுரை அனுப்பப்பட்டதும் விமர்சனங்களை எழுப்பின. பவா செல்லதுரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக வெந்து தணிந்தது காடு, ஜிகர்தண்டா 2, ஜப்பான் படங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் பவா செல்லதுரை: எழுத்தாளர் மற்றும் பதிப்பாசிரியர் என அடையாளங்களை கொண்டவர் பவா செல்லதுரை. மொழிப் பெயர்ப்பு பணிகளையும் தொடர்ந்து செய்துவரும் பவா செல்லதுரை வம்சி புக்ஸ் என்ற புத்தக நிலையத்தையும் பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார். எழுத்து, பதிப்பு ஆகிய பணிகளுடன் நடிப்பிலும் கதை சொல்லல் நிகழ்வுகளிலும் மிகவும் பிசியாக செயல்பட்டு வருகிறார் பவா செல்லதுரை. இவரது நடிப்பில் வெந்து தணிந்தது காடு, ஜிகர்தண்டா 2, ஜப்பான் படங்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளன. முன்னதாக ராஜூ முருகனின் ஜோக்கர் மற்றும் மிஷ்கினின் சைக்கோ போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
கதை சொல்லி: பவா செல்லதுரையின் கதை சொல்லல் சுவாரஸ்யமாக இருக்கும். ஏராளமான ரசிகர்களை தன்னுடைய கதை சொல்ல் பாணியால் கவர்ந்துள்ளார். இவரது கதை சொல்லல் உரைகளின் வீடியோக்கள் யூடியூபில் அதிகமாக காணப்படுகின்றன. இந்நிலையில் தற்போது பவா செல்லதுரை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் விரைவில் உடல்நலம் தேறி வீடு திரும்ப வேண்டும் என்று இலக்கிய வாசகர்கள் வேண்டி வருகிறார்கள்.
பல்வேறு தளங்கள்: எழுத்தாளர், பதிப்பாசிரியர், கதைசொல்லி, நடிகர் என பல தளங்களில் பயணித்துவந்த பவா செல்லதுரை தற்போது நிறைவு கட்டத்தில் உள்ள பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் துவக்க போட்டியாளராக இணைந்தவர். சில தினங்களிலேயே இவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இருந்த போதிலும் சில தினங்களிலேயே அனைத்து தரப்பினரையும் கவர்ந்தார். நிகழ்ச்சியில் அதிகமாக பேசாத போதிலும் கதை சொல்லி சிலரை கண்கலங்க செய்தார் பவா செல்லதுரை. தன்னை வயது மூத்தவன் என்பதால் யாரும் ஐயா என்று அழைக்க வேண்டாம் என்று கூறி ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
பிக்பாஸ் போட்டியாளர்: பெண்கள் நன்றாக சமைப்பதாக கூறி, அவர்களை சமையலறையில் ஆண்கள் உட்கார வைப்பதாக பவா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறிய கருத்திற்கு ஏராளமான ரசிகர்கள் வரவேற்று சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்தனர். பவா செல்லதுரை ஆர்மியையும் ரசிகர்கள் உருவாக்கி அவருக்கு ஆதரவான கருத்துக்களை பலரும் பதிவிட்டனர். மொத்தத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகமான நாட்கள் இல்லாத நிலையிலும் சிறப்பாக செயல்பட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார் பவா செல்லதுரை. இந்நிலையில் தற்போது அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது ரசிகர்களை வருத்தப்பட செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











