twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி முதல் தனுஷ் படம் வரை வசனம்.. என்றும் இளமை குறையாத எழுத்துக்குச் சொந்தக்காரர் பாலகுமாரன்!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : தமிழின் மூத்த எழுத்தாளர் 'எழுத்துச் சித்தர்' பாலகுமாரன் இன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகளைத் தாண்டி இவர் நிறைய திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார்.

    'நாயகன்', 'குணா', 'பாட்ஷா', 'ஜென்டில்மேன்', 'ஜீன்ஸ்', 'சிட்டிசன்', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட பல படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றியிருக்கும் பாலகுமாரன் திரைக்கதை எழுதுவதில் வல்லவர்.

    இவருக்கு வயது ஆனாலும், இவரது எழுத்துகள் எப்போதும் இளமையாகவே இருந்து வந்துள்ளன. அரசியல், சமூக கட்டுரைகள் எழுதும் வேளையிலேயே காதல் சொட்டும் நாவல்களும், படங்களில் இளமை ததும்பும் வசனங்களையும் எழுதியவர். எழுத்துச் சித்தரின் மறைவு தமிழ் எழுத்துலகிற்குப் பேரிழப்பு.

    நாயகன் வசனகர்த்தா

    நாயகன் வசனகர்த்தா

    மூத்த எழுத்தாளர் பாலகுமாரனின் திரைக்கதையிலும், வசனத்திலும் உருவான பல திரைப்படங்கள் வெற்றித் திரைப்படங்களாக்கியிருக்கின்றன. மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படும் 'நாயகன்' படத்திற்கு வசனம் எழுதியது 'எழுத்துச் சித்தர்' பாலகுமாரன் தான்.

    பாட்ஷா

    பாட்ஷா

    சந்தானபாரதி இயக்கத்தில் கமல் நடித்த 'குணா', ஷங்கர் இயக்கத்தில் உருவான முதல் படமான 'ஜென்டில்மேன்' ஆகிய படங்களில் தனது வசனங்களால் ரசிகர்களை ஈர்த்தார் பாலகுமாரன். சூப்பர்ஸ்டார் ரஜினியின் சூப்பர்ஹிட் கிளாசிக் படமான 'பாட்ஷா' படத்திற்கும் வசனம் எழுதியது எழுத்தாளர் பாலகுமாரன் தான்.

    பாலகுமாரன்

    பாலகுமாரன்

    ஷங்கரின் 'ஜென்டில்மேன்' படத்தைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் உருவான 'காதலன்', 'ஜீன்ஸ்' ஆகிய படங்களுக்கும் வசனம் எழுதினார் பாலகுமாரன். ஷங்கர் படங்களில் வசனங்கள் எப்போதும் சிறப்பானதாக இருக்கும். அதற்கு, பிற்பகுதி படங்களில் சுஜாதாவும், முதற்சில படங்களில் பாலகுமாரனும் தான் முழுக் காரணம்.

    எல்லா ஜானர் படங்களுக்கும்

    எல்லா ஜானர் படங்களுக்கும்

    அஜித் நடிப்பில் சரவண சுப்பையா இயக்கிய 'சிட்டிசன்' படத்திற்கு பாலகுமாரன் வசனம் எழுதினார். இந்தப் படத்தின் வசனங்களும் பெருமளவில் ரசிகர்களை ஈர்த்தன. அரசியல், சமூகம், காதல், குடும்ப சப்ஜெக்ட், பேய்ப்படம் என எந்த ஜானர் படமாக இருந்தாலும் அவருக்கேயுரிய ஸ்டைலில் வெளுத்து வாங்கினார் பாலகுமாரன்.

    இளைஞர்கள் விரும்பும் படங்களுக்கு வசனம்

    இளைஞர்கள் விரும்பும் படங்களுக்கு வசனம்

    சிம்பு இயக்கி நடித்து வெளியான 'மன்மதன்', 'வல்லவன்' ஆகிய படங்களிலும், 'அது' திகில் படத்திலும், தனுஷ் நடிப்பில் வெளியான கல்ட் படமான 'புதுப்பேட்டை' படத்திற்கும் வசனம் எழுதினார் பாலகுமாரன். அடுத்து அஜித் நடிக்கும் படம் ஒன்றிற்கு வசனம் எழுத இருப்பதாக கூறப்பட்ட நிலையில் காலமாகி இருக்கிறார்.

    இயக்குநர்

    இயக்குநர்

    வசனகர்த்தாவாக பணியாற்றியது தவிர படத்தையும் இயக்கியிருக்கிறார் பாலகுமாரன். கே.பாலசந்தர் இயக்கிய 'புன்னகை மன்னன்' திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பாலகுமாரன் பாக்யராஜை வைத்து 'இது நம்ம ஆளு' படத்தை இயக்கியிருக்கிறார்.

    ரசிகர்கள் வருத்தம்

    ரசிகர்கள் வருத்தம்

    எழுத்தில் என்றும் இளமையாகவே இருக்கும் பாலகுமாரனின் மறைவு அவரது ரசிகர்களையும், வாசகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரது ஆதர்ச எழுத்தாளரான பாலகுமாரனின் மறைவுக்கு வாசகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    'Ezhuthu Siddhar' Balakumaran passes away. He worked many successful films as a dialogue writer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X