சூர்யா சார் சாரி கேக்குறாரேனு மேக்கப் மேன் அழுதுட்டார்! சூரரைப்போற்று சம்பவத்தை பகிர்ந்த எழுத்தாளர்!

சென்னை: சூரரைப்போற்று படப்பிடிப்பின் போது நடந்த நெகிழ்ச்சி சம்பவத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிரபல எழுத்தாளர்.

ஜெய் பீம் படத்திற்கு வன்னியர் சமூகத்தினரிடம் இருந்து எதிர்ப்பு எழுந்த நிலையில் நடிகர் சூர்யா அடிக்கடி செய்திகளில் அடிப்பட்டு வருகிறார்.

நடிகர் சூர்யாவுக்கும் அவரது வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சூரரைப்போற்று சம்பவம்

சூரரைப்போற்று சம்பவம்

இந்த கடினமான சூழலில் தனக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களுக்கு நடிகர் சூர்யா உருக்கமாக நன்றி தெரிவித்து வருகிறார். இந்நிலையில் எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் தனது முகநூல் பக்கத்தில் சூரரைப்போற்று படத்தின் போது நடந்த நெகிழ்ச்சி சம்பவத்தை பதிவிட்டுள்ளார்.

ஏங்க பார்த்து செய்யமாட்டிங்களா

ஏங்க பார்த்து செய்யமாட்டிங்களா

அவர் பதிவிட்டிருப்பதாவது, நான் சந்தித்த மிக தன்மையான மனிதர்களில் நடிகர் சூர்யாவும் ஒருவர். ஒரு பகட்டு இருக்காது கர்வம் இருக்காது மிகப்பெரிய மாண்பாளர் அவர். "சூரரைப்போற்று" படப்பிடிப்பில் ஒரு நாள் மேக்கப்மேன் ஒருவர் ஒரு சின்ன குழந்தைக்கு பணி நிமித்தமாக ஒரு தவறைச் செய்துவிட்டார். கொஞ்சம் விட்டிருந்தால் அது ஆபத்தில் முடிந்திருக்கும். பதட்டத்தில் சூர்யா சார் மேக்கப் மேனிடம் "ஏங்க பார்த்து செய்யமாட்டிங்களா" என்று கொஞ்சம் உரத்த குரலில் சொல்லிவிட்டார்.

மன்னிப்பு கேட்ட சூர்யா

மன்னிப்பு கேட்ட சூர்யா

அந்த மேக்கப்மேன் "ஐய்யோ ஹீரோ கோபமாகிவிட்டார் அவ்வளவுதான் வேலை போகப்போகிறது" என்று பயப்பட ஆரம்பித்து, எல்லோரிடமும் புலம்பிக் கொண்டிருந்தார்.

ஆனால் அடுத்தநாள் சூர்யா சார் அவரை அழைத்து "சாரிங்க நேத்து கொஞ்சம் கடுமையா பேசிட்டேன். குழ்தைகள்கிட்ட வேலை செய்யுறப்ப கொஞ்சம் கவனமாக இருங்க" என்று சொன்னதும் அந்த மேக்கப்மேனுக்கு அழுகையே வந்துவிட்டது. தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு.

Recommended Video

Suriya -விற்கு நான் இருக்கேன்' குவியும் ஆதரவு | JaiBhim, PA.Ranjith, PC Sreeram
பாவனை செய்யாதவர்

பாவனை செய்யாதவர்

தயாரிப்பாளரும் ஹீரோவுமான அவர் தன்னை வேலையைவிட்டு அனுப்புவார் என்று பார்த்தால் தன்னிடம் சாரி கேட்கிறாரே என்று உருகிப் போய்விட்டார். இதுதான் நடிகர் சூர்யா. எளிய மக்களிடம் அன்பு பாராட்டுபவர். துளியும் நிஜ வாழ்வில் பாவனை செய்யாதவர். தன் படத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்தை மீறியும் பண உதவி செய்பவர்.

எந்த பாசாங்கும் இல்லாமல்..

எந்த பாசாங்கும் இல்லாமல்..

எந்த பாசாங்கும் இல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களோடு கைகோர்த்து நிற்பவரைப் பார்த்து சாதி அரசியல் நடத்துபவர்களுக்கு பயம் இருக்கத்தான் செய்யும். இன்னும் இன்னும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான சினிமாவை எடுங்கள் சூர்யா சார்.. மக்கள்‌ உங்கள் பக்கம் நிற்கிறார்கள்.. என பதிவிட்டுள்ள சந்திரா தங்கராஜ், #westandwithsuriya என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X