சமுத்திரக்கனி நடிக்கும்.. ரைட்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது !
சென்னை : பா.ரஞ்சித் தயாரிக்கும் ரைட்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சமுத்திரக்கனி போலீஸ் உடையில் கையில் ஒரு ஃபைலை வைத்துக்கொண்டு காவல் நிலையஅறையில் இருந்து வெளியே வருகிறார்.

இயக்குனராக
அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா ரஞ்சித், அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து மெட்ரா படத்தை இயக்கினார் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ரஜினியை வைத்து காலா, கபாலி படங்களை இயக்கி வெற்றி இயக்குனர் என பெயர் எடுத்தார்.

தயாரிப்பில் கவனம்
இயக்குநரான பா.ரஞ்சித், தன்னுடைய நீலம் ப்ரொடக்சன்ஸ் மூலம் படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிக்குண்டு ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கதாநாயகனாக
இந்த நிலையில், நீலம் ப்ரொடக்சன்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ரைட்டர் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் பிராங்களின் ஜேக்கப் இயக்குகிறார்.
Recommended Video

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ள பா. ரஞ்சித், மனித மனங்களின் தீராத அதிகார வேட்கைக்குப் பலியாகும் எளிய மனிதர்களின் எழுதி முடித்த பக்கங்களை மாற்றி எழுதுவான் இந்த ரைட்டர் எனக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











