சர்காரில் என்னுடைய வேலை இது தான் – எழுத்தாளர் ஜெயமோகன்

Recommended Video

சினி சிப்ஸ்-சூடான சினிமா செய்திகள்

சென்னை: சர்கார் கதை விவகாரம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கமளித்துள்ளார்.

சர்கார் கதை பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வந்தது. கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் எல்லாம் ஏஆர்.முருகதாஸ் தான் என அறிவிக்கப்பட்ட பிறகும் ஆங்காங்கே சில பூசல்கள் தொடர்கின்றன.

Writer Jeyamohan explains about Sarkar issue

குறிப்பாக, 42 நாட்கள் சர்கார் கதையை வடபழனியில் உள்ள நட்சத்திர விடுதியில் உட்கார்ந்து செதுக்கினோம் என எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் எழுத்தாளர் ஜெயமோகன், மீண்டும் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். உங்களுடைய வழக்கமான எதிரிகள் தாண்டிக்குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்போதுள்ள சூழலில் சர்கார் படத்தின் கதை, திரைக்கதை எவருடையது? உங்கள் பங்களிப்பு என்ன? என வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கீழ்க்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

"நான் ஏற்கனவே சொன்னதுதான். நான் நேரில் அமர்ந்து பார்த்ததன் அடிப்படையில் அதன் கதை, திரைக்கதை ஏ.ஆர்.முருகதாஸுடையது. அது ஒற்றைவரியிலிருந்து திரைக்கதையானபோது நான் உடனிருந்தேன். ஆகவே அதைப் பதிவுசெய்வது என் கடமை என நினைத்தேன்.

கதை உருவாக்கத்தில் அவருடன் நான்கு உதவியாளர்கள் உதவினார்கள், ஒருவர் ஏற்கனவே மான்கராத்தே படம் இயக்கிய திருக்குமரன், இன்னொருவர் என் நண்பரும் வத்திக்குச்சி பட இயக்குநருமான கிங்க்ஸ்லின். என் பணி அது திரைக்கதைக்குரிய ஓட்டத்துடன் அமைகிறதா, சிதறிச்செல்கிறதா என்று பார்ப்பதும், காட்சிகளுக்கு அவற்றுக்குரிய வசன வடிவை அமைப்பதும் மட்டுமே. எல்லா படங்களிலும் என் பணி அவ்வளவுதான் என பதிலளித்துள்ளார்."

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X