twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெந்துதணிந்தது காடு..உயிரோடு இருக்கும் ஒரு மனிதரின் வாழ்க்கை பற்றிய கதை..ஜெயமோகன் சொன்ன தகவல்!

    |

    வெந்துதணிந்தது காடு..உயிரோடு இருக்கும் ஒரு மனிதரின் வாழ்க்கை பற்றிய கதை..ஜெயமோகன் சொன்ன தகவல்!

    சென்னை : வெந்துதணிந்தது காடு திரைப்படம் குறித்த சுவாரசியத் தகவலை கதாசிரியர் ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.

    வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

    இப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தின் பாடல்கள், டிரைலர்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

    தனுஷுக்கு டோலிவுட்டில் இப்படியொரு ஃபேன் பேஸா.. 200 காட்சிகளுக்கு மேல் ஹவுஸ்ஃபுல்லான '3’ திரைப்படம்! தனுஷுக்கு டோலிவுட்டில் இப்படியொரு ஃபேன் பேஸா.. 200 காட்சிகளுக்கு மேல் ஹவுஸ்ஃபுல்லான '3’ திரைப்படம்!

    வெந்து தணிந்தது காடு

    வெந்து தணிந்தது காடு

    ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் உடல் எடையை குறைத்து 20 வயது இளைஞராக சிம்பு மாறினார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது.

    மிரட்டலான டிரைலர்

    மிரட்டலான டிரைலர்

    வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், சிம்பு மற்றும் ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி மூன்றாவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியானது, டிரைலரின் ஆரம்பத்தில், கௌதம் மேனனின் மிரட்டலான குரலில், சில சமயம் உண்மையை சொல்வது கதை சொல்வதைவிட கஷ்டம்..இது ஒரு உண்மையான மனுஷனோட வாழ்க்கை என்று ஏ.ஆர் ரஹ்மானில் பின்னணி இசையில் டிரைலர் மிரட்டியது.

    இதுதான் கதை

    இதுதான் கதை

    இப்படத்தின் கதாசிரியர் ஜெயமோகன் அளித்துள்ள பேட்டி ஒன்றில், டிரைலரில் வன்முறை காட்சிகள் இருப்பதை பார்த்த பலர் இது ஆக்‌ஷன் படமா என கேட்கிறார். இது ஆக்ஷன் படம் இல்லை, உயிரோடு இருக்ககூடிய ஒரு மனிதரின் வாழ்க்கை கதையாகும். அதனாலேயே என்னால் இதனை முழு கதையாக எழுத முடியவில்லை என்றார் ஜெயமோகன்.

    அப்பாவி பையன்

    அப்பாவி பையன்

    வெந்து தணிந்தது காடு படத்தின் கதையை புதுமுக ஹீரோவை வைத்து எடுக்குமாறு சொல்லி இருந்தேன். கதைப்படி ஹீரோ கல்லூரியில் படித்த, வெளி உலகம் பற்றி ஒன்றுமே தெரியாத அப்பாவி பையன். இவன் மும்பை போறது தான் நான் எழுதுன கதை. அங்கேயே அது முடிந்து விட்டது. அதனால் கண்டிப்பாக பெரிய ஹீரோ, இந்த கதையை பண்ண முடியாது என சொன்னேன்.

    காதல் இல்லை

    காதல் இல்லை

    ஆனால் கௌதம் மேனன் சிம்புவிடம் கேட்டு பார்ப்பதாக கூறிவிட்டு போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை அனுப்பி வைத்தார். நான் சிம்பு தான் சரியாக இருக்கும் பின்னர் ஒப்புக் கொண்டேன். ஒரிஜினல் கதையில் காதல் என்பது ஒரு சின்ன பகுதியாகத்தான் இருக்கும. அதனால் கதையில் எந்தவித பாதிப்பும் இருக்காது என ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.

    English summary
    writer jeyamohan revealed intresting information about vendhu thanindhathu kaadu
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X