மிரட்டல் வில்லியுடன் பாபி சிம்ஹா கலக்கப் போகும் அக்னி தேவ்.. படமாகும் ராஜேஷ்குமார் திரில்லர்
மிரட்டல் வில்லியுடன் பாபு சிம்ஹா படமாகிறது அக்னிதேவ். ராஜேஷ்குமார் திரில்லர் கதை படமாகிறது.
சென்னை: படையப்பா வில்லியை யாரும் மறந்திருக்க முடியாது. மீண்டும் அப்படிப்பட்ட ஒரு அரட்டல் வில்லியை மீண்டும் தமிழ் ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள்.. பாபி சிம்ஹா நாயகனாக நடிக்கும் அக்னி தேவ் படத்தில்தான் மிரட்டலான வில்லியைக் களம் இறக்கவுள்ளார்கள்.
பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் திரில்லர் நாவல் திரைப்படமாகிறது. இந்தப் படம்தான் அக்னி தேவ். பாபி சிம்ஹா நாயகனாக நடிக்கிறார். சதீஷூம் படத்தில் காமெடியனாக இடம் பெறுகிறார். பிற நட்சத்திரங்கள் குறித்த தேர்வு நடந்து வருகிறது.
படத்தின் கதை குறித்து ராஜேஷ்குமாரிடம் கேட்டபோது அது சஸ்பென்ஸ் என்று கூறி சிரித்தபடி நழுவி விட்டார். அடடா வடை போச்சே என்று நீங்கள் அரக்கப் பறப்பது தெரிகிறது. படத்தில் வேறு சில சுவாரஸ்ய மேட்டர்கள் உள்ளன. வாங்க பார்ப்போம்.
செனோட்டோ ஸ்டுடியோ வழங்கும், ஜெய் பிலிம் தயாரிப்பில் ஜேபிஆர் இயக்கும் படம்தான் அக்னி தேவ். இயக்குநர் ராஜேஷ் குமாரின் திரில்லர் நாவலை அடிப்படையாகக் கொண்டு இது தயாரிக்கப்படுகிறது.

மிரட்ட வரும் வில்லி
இப்படத்தில் நாயகனாக பாபி சிம்ஹா நடிக்கிறார். காமெடிக்கு சதீஷ். அதேசமயம், படத்தின் முக்கிய கதாபாத்திரமே வில்லிதானாம்.

வில்லியாக வரப் போவது யார்
வில்லி வேடத்தில் யார் என்பது இன்னும் முடிவாகவில்லையாம். ரம்யா கிருஷ்ணன், நதியா உள்ளிட்ட சிலரிடம் பேசி வருகிறார்களாம். இதில் ஒருவர் வில்லியாக நடிக்கலாம் என்று தெரிகிறது.

ஹீரோயின் யார்
அதேபோல ஹீரோயின் யார் என்பதும் இன்னும் முடிவாகவில்லை. அதற்கும் சில முக்கிய நாயகிகளைப் பரிசீலித்து வருகின்றனராம். விரைவில் விவரம் தெரிய வரும்.

பூஜை
படத்தின் பூஜை கோவை ஸ்ரீ சாய்பாபா கோவிலில் நேற்று காலை நடைபெற்றறது. எழுத்தாளர் ராஜேஷ் குமார், இயக்குநர் ஜேபிஆர், தயாரிப்பாளர் ஜெய பிரபா, நடிகர்கள் பாபி சிம்ஹா, சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











