3 BHK: விட்டதை பிடிச்சிட்டிங்க ஶ்ரீ.. நாம ஜெயிக்க வைக்க வேண்டிய படம்.. பாராட்டிய பிரபலம்!

சென்னை: இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 3 BHK. இந்த படத்தில் சரத்குமார், சித்தார்த், தேவயானி, ரிது ரகுநாத், சாய்த்ரா, யோகி பாகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படம் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வியலை படமாக்கியுள்ளதால், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் படம் குறித்து எழுத்தாளும் சமூக செயற்பாட்டாளருமான ஸ்டாலின் பாலுச்சாமி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் படம் குறித்து மிகவும் சிலாகித்து பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அவரது பதிவில், " 3 BHK எல்லோரும் தவற விடாமல் நிச்சயம் பார்க்க வேண்டிய படம். மனசுக்கு ரொம்ப ரொம்ப நிறைவா இருக்கு படம்.. அம்மாவும் நானும் தான் படம் பார்த்தோம். ஒரு நல்ல குடும்ப படத்தை எடுத்து இருக்கீங்க. ஒட்டு மொத்த குழுவுக்கும் மனமார்ந்த நன்றியும் அன்பும். எங்க அம்மா பேரு சாந்தி தான், படத்தில் அப்படியே என்னையும் அப்பாவையும் அப்படியே பொருத்தி பார்க்க முடிஞ்சது.

நம்ம வீட்டோட கதையை எந்த மிகையும் இல்லாமல் எடுத்தற்கும் இயல்பாக எல்லோரையில் திரையில் காட்டியதற்கும் சொல்லிகிட்டே போகலாம். படத்தை எல்லோரும் தியேட்டரில் போய் பார்க்கணும். விட்டதை பிடிச்சிட்டிங்க ஶ்ரீ இந்த படத்தில். மனசுக்குள் இருந்த பரிதவிப்பை எல்லாம் இடைவெளிக்கு பின்னான காட்சி பூரணமாக்கிடுச்சு. இன்னும் சொல்ல நிறைய இருக்கு.. கடவுளுக்கு ரொம்ப நன்றி. உங்களோட அம்மாவையும் மனைவி பாப்பா எல்லோரையும் நினைச்சுகிறேன். இப்ப இருக்கிற இந்த engineering படிப்பு கொடுத்த மன அழுத்தம்,வீட்டோட நம்பிக்கையும் காப்பாத்த முடியாம ஏற்பட்ட கோபம் எல்லாம் சித்தார்த் அவ்வளவு இயல்பா வெளிப்படுத்தி இருக்கார்.

Writer Stalin baluchamy Appriciates Director Sri Ganesh and 3 BHK Movie
Photo Credit:

நம்ம இயல்புக்கு ஒத்த மனிதர்களையே வாழ்க்கை துணையா தேர்ந்து எடுத்துகிறது,மனசுக்கு பிடிச்சதை தொழிலா செய்யும் போது கிடைக்கும் நிறைவு இப்படி அணு அணுவா என்னையவே பார்க்க முடிஞ்சது. இடைவெளி வரைக்கும் ஒரு பயம் இருந்துகிட்டே இருந்தது,படம் ரொம்ப ரொம்ப மென்மையா மெதுவா போகுதுன்னு, வேண்டிக்கிட்டேன் அய்யா ஶ்ரீ கணேஷ் எப்படியாவது மீண்டு வந்துடுங்கன்னு.

இடைவெளிக்கு அப்புறம் படம் நம்ம வீட்டுக்குள்ளேயே இருக்குற உணர்வை கொடுக்குது, அந்தரங்கமான சிரமங்களை,ஆண் , பெண் உறவை , பணம் வைச்சு இருக்கிற சொந்தக்காரங்க காட்டுற அதிகாரத்தை, அப்பா என்னைய மாதிரி ஆகிடாதடான்னு சொல்லும் போது வலிக்குது. எந்த பிசகும் சின்ன மன விலக்கம் கூட இந்த படத்தில் வரல இத்தனை நல்ல படத்தை எடுக்க இந்த ஆளும் அவங்க கூட்டாளிகளும் எவ்வளவு போராடி இருப்பாங்க அப்படின்னு நினைச்சா மலைப்பா இருக்கு.

நாம ஜெயிக்க வைக்க வேண்டிய படம் இது... நிச்சயம் எல்லோரும் தியேட்டர் போய் பாருங்க. யார் என்ன சொன்னாலும் நீங்க நேரில் படம் பார்த்தால் நம்ம அப்பா,அம்மா, மனைவி பிரிய தங்கை ,அண்ணன், தம்பி எல்லோரையும் பார்க்க முடியும். எனக்கு வீடு படம், தவமாய் தவமிருந்து படம் பார்த்த போது கிடைச்ச மன நிறைவு இதிலேயும் பார்க்க முடிஞ்சது" என பதிவிட்டுள்ளார். இவரது பதிவுக்கு படத்தின் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் " மிக்க நன்றிங்க ஸ்டாலின் பாலுச்சாமி, உங்க வார்த்தைகள் நிறைவா இருக்கு" என்று கமெண்ட் செக்‌ஷனில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X