Kanaka - அவளுக்கு 2 வயசுதான்.. அப்பா ஓடிப்போயிட்டாரு.. வளர்க்க அவ்ளோ கஷ்டம்.. கனகாவின் தாய் சொன்ன சீக்ரெட்
சென்னை: நடிகை கனகா 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். இன்னும் பல வருடங்கள் தொடர்ந்து டாப் இடத்தில் எதிர்பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென காணாமல் போனார் கனகா. அதனையடுத்து அவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.இந்த சூழலில் தேவிகா அவரை பற்றி பேசிய விஷயம் தெரியவந்திருக்கிறது. இதனை எழுத்தாளர் சுரா ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா. இவர் கரகாட்டக்காரன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பெரிய விருப்பம் எதுவும் இல்லாமல்தான் கனகா நடிப்பதற்கு தேவிகா ஒத்துக்கொண்டார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக கரகாட்டக்காரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதன் காரணமாக கனகா தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்டார். தொடர்ந்து பட வாய்ப்புகளும் கிடைத்தன.

பிஸியான கனகா: தமிழில் முதல் படம் ஹிட்டான பிறகு ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார் கனகா. அதேபோல் தெலுங்கிலும் பல படங்களில் புக் ஆனார். இதன் காரணமாக நிற்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தார் அவர். சூழல் இப்படி இருக்க திடீரென அவர் காணாமல் போனார். ஒருகட்டத்தில் கனகா உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதுகூட ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தது.
தனிமைப்படுத்திய கனகா: அவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். யாரையும் சந்திப்பதில்லை, வெளியே வருவதில்லை என்று ஏகப்பட்ட விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அதற்கு காரணம் தேவிகாவின் மரணம் ஒன்று என்றும் இன்னொரு காரணம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த காதல் தோல்வி என்றும் பேசப்பட்டது. இருந்தாலும் கனகா பத்திரிகையாளர்களையோ சினிமாக்காரர்களையோ சந்திக்கவே இல்லை.
குட்டி பத்மினி என்ட்ரி: இப்படிப்பட்ட சூழலில்தான் இந்த விஷயத்துக்குள் நடிகை குட்டி பத்மினி வந்தார். கனகாவின் வீட்டுக்கு வெளியே நீண்ட நேரம் காத்திருந்து அவரை எப்படியோ சந்தித்துவிட்டார். இரண்டு பேரும் அருகில் இருக்கும் காஃபி ஷாப் ஒன்றுக்கு சென்று நீண்ட நேரம் பேசியிருந்துவிட்டு கலைந்தனர். அப்போது கனகாவுக்கு குட்டி பத்மினி முத்தம் கொடுக்கும்படியான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகின.
நம்ம கனகாவா இது?: அந்தப் புகைப்படத்தை பார்த்தபோது நம்ம கனகாவா இவங்க என ரசிகர்கள் ஆச்சரியம்தான் பட்டனர். மேலும் அந்த சந்திப்புக்கு பிறகு பேட்டி அளித்த குட்டி பத்மினி, 'கனகாவுக்கு சில விஷயங்களை சொல்லியிருக்கிறேன். அவர் விரைவில் வெளியே வந்து பேட்டி அளிப்பதாக என்னிடம் தெரிவித்திருப்பதாக கூறியிருந்தார் பத்மினி. இதனால் கனகாவின் பேட்டிக்கு ரசிகர்கள் காத்திருந்தனர்.
நோ சொன்ன கனகா: ஆனால் சமீபத்தில் குட்டி பத்மினி, நான் போன் செய்தால் கனகா எடுப்பதில்லை என்று விரக்தியாய் தெரிவித்திருந்தார். இதற்கிடையே கனகாவுக்கும் அவரது தந்தைக்குமான மனஸ்தாபமும் தீர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கனகாவின் தாயான தேவிகாவிடம் நெருங்கி பழகிய எழுத்தாளர் சுரா தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சில சீக்ரெட்களை சொல்லியிருக்கிறார்.
சுரா பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "கனகாவின் தாய் தேவிகா எனக்கு ரொம்பவே நல்ல பழக்கம். இப்போது மாதிரி அப்போது சினிமா இல்லை. எல்லோரையும் அணுகுவது ரொம்பவே எளிதாக இருந்தது. நான் தேவிகாவின் வீட்டுக்கு சென்றே அவருடன் நிறைய விஷயங்களை நான் பேசியிருக்கிறேன். அதனால் கனகாவையும் எனக்கு தெரியும். கரகாட்டக்காரன் நடித்து முடித்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக அவர் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் நாளிதழ் ஒன்றில் தேவதாஸ் என்பவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
என்ன அறிக்கை: அந்த அறிக்கையில் , நான் தான் கனகாவின் அப்பா. எனது மகள் கனகாவை எனது மனைவி தேவிகா தவறான வழியில் அழைத்து சென்று பணம் சம்பாதிக்கிறார். கனகாவை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற தொனி இருந்தது. இதுகுறித்து தேவிகாவிடமே நேரடியாக கேட்டேன். அதற்கு அவர், சுரா அந்த தேவதாஸுக்குதான் கனகா பிறந்தநாள் என்பது உண்மைதான். அதை நான் பொய் என்று சொல்லவில்லை.
ஓடிப்போயிட்டாரு: ஆனா கனகாவுக்கு 2 வயசு இருக்கும்போதே அந்த ஆளு வீட்டை விட்டு ஓடிப்போயிட்டாரு.இந்தப் பொண்ணை நான் கஷ்டப்பட்டு வளர்த்தேன். கனகா வளர வளர நான் சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டேன். எனக்கு ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்தபிறகு நினைத்திருந்தால் நான் தாய், அண்ணி போன்ற வேடங்களை ஏற்றிருக்கலாம். ஆனால் நான் அப்படி செய்யாமல் ஒதுங்கிவிட்டேன். எனது பெண்ணுக்காக ஒதுங்கினேன்.
கனகாவுக்காக எனது வாழ்க்கையையே நான் தியாகம் செய்தேன். அவளை வளர்ப்பதற்கு நான் படாத பாடு பட்டேன். இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்த பிறகு கரகாட்டக்காரன் பட வாய்ப்பு கிடைத்து அது ஹிட்டடித்து இப்போது படங்கள் புக்காகியிருக்கின்றன. இத்தனை வருடங்கள் அவனா வளர்த்தான். திடீர்னு இன்னைக்கு வந்து இப்படி பேசுறான். நான் என்ன தவறான வழில என் மகளை வைத்து சம்பாதிக்கிறேன். இவனுக்கு என்ன தகுதி இருக்கு இப்போது வந்து பேச. சொந்த படம் எடுத்து கடனாளி ஆகி வீட்டை விட்டு ஓடிப்போனவன் அவன் என தேவிகா கொந்தளித்துவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











