“கொரோனா கால பெரு நகரத்துத் தனியர்கள்’’.. அஜயன் பாலாவின் உருக்கமான பதிவு !
சென்னை : எழுத்தாளர் அஜயன் பாலா, கொரோனாவால் சாமானியர்கள் சந்திக்கும் பிரச்சினை குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட எழுத்தாளர்கள், பாடல் ஆசிரியர்கள் வித விதமான பதிவுகளை கொரோனா சம்பந்தமாக கூறிக் கொண்டே தான் இருக்கிறார்கள். எழுத்தாளர் அஜயன் பாலா பல புத்தங்ககள் எழுதி உள்ளார். பல திரைப்படங்களில் பல எழுத்தாளர்களுடனும் , இயக்குனர்களுடன் சேர்ந்து பல நல்ல கருத்துக்களை சொல்லி வருவதில் மிகவும் ஆர்வம் காட்டுபவர்.

பாலுமகேந்திரா நினைவாக ஒரு பொக்கிஷமான நூலகம் நடத்தி வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு. கொரோனாவால் சாமானிய மக்கள் சந்தித்து வரும் அவலங்கள் குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதில், கொரோனா கால பெரு நகரத்துத் தனியர்கள்" என்ற தலைப்பில் சாமான்ய மக்களின் கஷ்டங்களை உணர்த்தும் விதமாக உள்ளது இந்த பதிவு.
கொரோனா கால பெரு நகரத்துத் தனியர்கள் -
பூட்டிய வீட்டுக்குள் யாருமற்றவர்களின் துயரத்தை யோசித்துப்பாருங்கள்.
பூரான் பல்லி பூச்சிகள் விளையாடும் அவர்களின் அக உலகம் வீடற்றவர்களைக் காட்டிலும் கொடியது.
இப்பெரு நகரத்துத் தனியர்களுக்களுக்காக
என் இதயம் வருந்துகிறது.
உங்கள் அக்கம் பக்கம் தனியர்கள் வசித்திருப்பின் வாய்விட்டுக் கேளுங்கள்
ஐயா சாப்பிட்டீங்களா அவர்கள் கூச்ச சுபாவிகள் ஓட்டுக்குள் ஒளிந்து கொள்பவர்கள்
அதனால் தைரியமாக பேசுங்கள், யாரோடும் ஒத்துப்போகாத அவர்களின்
சுபாவம் தான் அவர்கள் இந்த ஊரடங்கிலும் தனித்திருக்கக் காரணம் கொஞ்சம்
நெருங்கிப்பேசினால் அழுதுவிடுவார்கள். சொந்த அப்பா அம்மாவுக்கு உடன்
பிறந்த உன்மத்தங்களுக்கு மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு அவர்கள்
வெளிப்படுத்த முடியாமல் தோற்றுப்போன அன்பின், கண்ணீர்த்துளி அது.
ஒ என் பாசத்துக்குரிய கொரோனா காலத்து தனியர்களே உங்களை நான் உவப்புடனே காதலிக்கிறேன். மகிழ்ச்சியாக இருங்கள் என்று மிகவும் உருக்கமாக ஒரு பதிவை தந்து உள்ளார் அஜயன் பாலா.
இந்த பதிவு ஒவ்வொரு இந்தியனுக்கும், மற்றவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களுக்கும் கண்டிப்பாக போய் சேர வேண்டும். பாதுகாப்பாக இருந்து இந்த கொடிய வியாதியை விரட்ட வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் ஒரு லட்சியமாக கருதப்படுகிறது என்று தனது பதிவில் கூறியுள்ளார் அஜயன் பாலா.


Click it and Unblock the Notifications