twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏன் கமலா, உதயம் தியேட்டர்களில் காலா வெளியாகவில்லை.. வுண்டர்பார் நிறுவனம் விளக்கம்

    By Staff
    |

    Recommended Video

    தமிழகத்தில் 500 தியேட்டர்களில் காலா- வீடியோ

    சென்னை: சென்னை கமலா மற்றும் உதயம் தியேட்டர்களில் காலா திரைப்படம் வெளியாகாதது ஏன் என்று காலா படத்தின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் விளக்கம்அளித்துள்ளது. மற்ற திரையரங்குகளை ஒப்புக்கொண்ட விதிகளை இந்த திரையரங்குகள் ஒப்புக்கொள்ளவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

    Wunderbar Films gives an explanation on Why Kaala will not release in Kamala and Udhayam

    ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியின் காலா திரைப்படம் நாளை உகம் முழுவதும் ரிலீசாகிறது. ஆனால் சென்னை கமலா மற்றும் உதயம் தியேட்டர்களில் காலா திரைப்படத்திற்குப் பதில், நாளை ஜூராசிக் வேர்ல்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை உள்ளது. வெளியாவது சந்தேகத்தில் உள்ளது. தற்போது கமலா, உதயம் பின்வாங்கி இருப்பதால் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்திலும் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் ரிலீசாகிறது.

    சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நாளை காலா படத்திற்குப் பதில் ஜூராசிக் வேல்டு படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அத்தியேட்டரின் மேலாளர் கோபி அளித்துள்ள விளக்கத்தில், "காலா படக்குழுவின் நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை. டிக்கெட்களை அதிக விலைக்கு விற்க விநியோகஸ்தர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க இயலாது என நாங்கள் மறுத்து விட்டோம். '' என்று விளக்கம் அளித்தார்.

    இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. கமலா தியேட்டரின் இந்த குற்றச்சாட்டை வுண்டர்பார் நிறுவனம் மறுத்துள்ளது. இதுகுறித்து வுண்டர்பார் நிறுவனம் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளது.

    அதில் ''மற்ற தியேட்டர்கள் ஏற்றுக்கொண்ட விதிகளை சென்னை கமலா தியேட்டரும், உதயம் தியேட்டரும் ஏற்கவில்லை. அதனால் படம் வெளியாகவில்லை. அதிக விலையில் டிக்கெட் வசூலிக்க சொன்னதால் படம் வெளியாகவில்லை என்று வெளியாகும் செய்தி முழுக்க முழுக்க பொய் ஆதாரமற்றது.'' என்று விளக்கம் அளித்துள்ளது.

    English summary
    Wunderbar Films gives an explanation on Why Kaala will not release in Kamala and Udhayam.The Chennai Kamala and Udhayam theatres are not releasing rajini's Kaala movie, because of the terms and conditions of movie team. Now Wunderbar Films gives, ''Kamala & Udhayam theaters have not expressed their consent to the similar terms that's been agreed by other cinemas. News going around saying huge demands put forth is absolutely false & baseless.'' explanation in twitter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X