என்னை காப்பியடிச்சு டிவிட்டு.. அதுல டிவிஸ்ட் வேறயா? ரன்வீர் சிங்கிற்கு மல்யுத்த வீரர் நோட்டீஸ்!
மும்பை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் போட்ட ஒரு டிவிட் பூதாகரமாகியுள்ளது.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் நேரில் கண்டுகளித்தார்.
இந்த போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து ரன்வீர் சிங், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து எடுத்த செல்பி படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
பிரச்சனையை கிளப்பிய டிவிட்
அதோடு ஒரு கருத்தையும் பதிவிட்டார். அதாவது, சாப்பிடு, தூங்கு, ஆதிக்கம் செலுத்து, மீண்டும் அதையே செய், அது ஹர்திக், ஹர்திக் பாண்டியா என்பதுதான் அது. இந்த டிவிட்தான் அவருக்கு தற்போது பிரச்சனையாகியுள்ளது.
ரன்வீருக்கு நோட்டீஸ்
சாப்பிடு, தூங்கு, ஆட்டத்தை முடி, மீண்டும் அதையே செய் என்பது டபிள்யூ டபிள்யூ ஈ மல்யுத்த வீரர் பிராக் லெஸ்னாரின் வழக்கறிஞர் பால் ஹேமேனின் தாரக மந்திரமாகும். இந்நிலையில் தன்னுடைய தாரக மந்திரத்தை காப்பியடித்துவிட்டதாக பால் ஹேமேன் ரன்வீர் சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பால் ஹேமேன் கோபம்
இதுதொடர்பாக லெஸ்னாரின் வழக்கறிஞர் பால் ஹேமேன் டிவிட்டரில் என்னை கிண்டல் செய்கிறாயா என கோவமாக கேட்டுள்ளார். மேலும் நான் எச்சரிக்கவில்லை, சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளேன் என்றும் பால் ஹேமேன் கூறியுள்ளார்.

இதே பிரச்சனையை கிளப்பிய பால
கடந்த ஜனவரி மாதம் தோனியை இதே சொற்றொடர்களால் பாராட்டிய கிரிக்கெட் வோர்ல்ட் கப் டிவிட்டர் அமைப்புக்கும் கண்டனம் தெரிவித்த பால் ஹேமேன் இதே பிரச்சனையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











