விஜய்க்கு சர்வதேச அளவில் தர்ம அடி.. எக்ஸ் பக்கத்தில் கொட்டப்பட்டது வன்மமா? ரசிகர்களே இதை பாருங்க!
சென்னை: தமிழ் சினிமா உலகில் டிவிட்டரில் செம ஆக்டிவாக இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் என்றால் அதில் முதல் மூன்று இடங்களில் விஜய்யின் ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். ஆனால் இப்போது அந்த ரசிகர்களுக்கு டிவிட்டர் பக்கம் செம ஷாக்கிங்கான தகவலை எடுத்துக் கொட்டியுள்ளது. இப்படி ஒரு அதிர்ச்சி அளிக்கும் தகவலை ட்விட்டர் பக்கமே பட்டியலிடும் என விஜய் ரசிகர்கள் ஒருநாளும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்றுதான் கூறவேண்டும்.
அதாவது ட்விட்டர் வாசி ஒருவர், தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் மிகவும் மோசமான படங்கள் எது என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, டிவிட்டரின் Grok செயலி, விஜய் படங்களைப் பட்டியலிட்டுள்ளது. இதனை அந்த டுவிட்டர் வாசி தனது பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது, தமிழில் வெளியான கேவலமான படங்கள் என்னென்ன என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். அதற்கு, "தமிழ் சினிமாவுல கேவலமான படங்கள் பற்றி பேசறது கொஞ்சம் சிக்கலான விஷயம் ஏன்னா ஒருத்தருக்கு பிடிக்காத படம் இன்னொருத்தருக்கு. பிடித்திருக்கலாம். ஆனாலும், பொதுவா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் பல படங்கள் மோசமான கதை, மோசமான நடிப்பு, அல்லது தரமற்ற தயாரிப்பு காரணமா விமர்சிக்கப்பட்டிருக்கு. இதுல சில படங்களை பார்ப்போம் ஆனா இது முழுக்க முழுக்க சப்ஜெக்டிவ் (subjective) ஆன விஷயம்னு மனசுல வச்சுக்கோ,

தமிழ் சினிமாவுல விமர்சிக்கப்பட்ட சில படங்கள்,
1. சுறா (2010)
விஜய் நடிச்ச இந்த படம் ரொம்பவே எதிர்பார்ப்போடு வெளியானது, ஆனா படத்தோட கதை, திரைக்கதை, லாஜிக் இல்லாத காட்சிகள் எல்லாம் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது. கேவலமான படம தமிழல எடுக்கவே முடியாது'னு ஒரு யூசர் சொல்லியிருந்தாரு. ஆனா இதெல்லாம் அவரோ_ தனிப்பட்ட கருத்துதான்.

2. தலைவா (2013)
இதுவும் விஜய் நடிச்ச படம். இந்த படம் ஒரு மாஸ் ஹீரோ படமா வெளியானது,ஆனா கதை ரொம்ப பழைய டெம்ப்ளேட்ல இருந்தது. விஜய் ஒரு டான்ஸரா ஆரம்பிச்சு, அப்புறம் ஒரு டான் ஆக மாறுவாரு, ஆனா இந்த டிரான்ஸ்ஃபர்மேஷன் ரொம்பவே நம்ப முடியாத மாதிரி இருந்ததா விமர்சிக்கப்பட்டது. X-ல சில பதிவுகள் பார்த்தா, இந்த படத்தையும் "கேவலமான படங்கள்" லிஸ்ட்ல சேர்த்து பேசியிருக்காங்க.

3. புலி (2015)
விஜய் நடிச்ச இன்னொரு படம். இது ஒரு ஃபேன்டஸி படமா வெளியானது, ஆனா படத்தோட CGI (கிராஃபிக்ஸ்), கதை, லாஜிக் எல்லாம் ரொம்பவே மோசமா இருந்ததா பலரும் விமர்சிச்சாங்க. படத்துல விஜய் இரட்டை வேடத்துல நடிச்சிருந்தாலும், கதையோட ஃப்ளோ ரொம்பவே சுமாரா இருந்தது. இதுவும் X-ல சில யூசர்களால "மோசமான படங்கள்" லிஸ்ட்ல சேர்க்கப்பட்டிருக்கு

இதுவும் விஜய் நடிச்ச படம். இதுல விஜய் ஒரு மதுரை பின்னணியில ஹீரோவா நடிச்சிருப்பாரு, ஆனா படத்தோட கதை ரொம்ப புழைய மசாலா டெம்ப்ளேட்ல இருந்தது. விஜய்யோட மாஸ் காட்சிகள் இருந்தாலும், படத்துல புதுசா எதுவுமே இல்லைனு விமர்சிக்கப்பட்டது. X-ல இதையும் சிலர் மோசமான படம்னு சொல்லியிருக்காங்க.
5. பைரவா (2017)
விஜய்யோட இன்னொரு படம். இதுல விஜய் ஒரு ரவுடியா நடிச்சிருப்பாரு, ஆனா படத்தோட கதை, வில்லன் கேரக்டர், லாஜிக் எல்லாம் ரொம்பவே பலவீனமா இருந்ததா சொல்லப்பட்டது. ரசிகர்கள் இதையும் பலமா விமர்சிச்சாங்க, X-ல இதையும் மோசமான படங்கள் லிஸ்ட்ல சேர்த்து பேசியிருக்காங்க" என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் மற்ற நடிகர்களின் படங்கள் மோசமான படங்களான எக்ஸ் பக்கம் பட்டியலிட்டுள்ளது. ஆனால் முதல் 5 இடத்தில் விஜய் படங்களே இருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











