»   »  'எக்ஸ் வீடியோஸ்' படத்துக்கு 'ஏ' சர்ட்டிஃபிகேட்!

'எக்ஸ் வீடியோஸ்' படத்துக்கு 'ஏ' சர்ட்டிஃபிகேட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
பெண்களின் பாதுகாப்பு குறித்த படம் 'எக்ஸ் வீடியோஸ்..??

சென்னை : இயக்குனர் ஹரியின் உதவியாளர் சஜோ சுந்தர் இயக்கியுள்ள படம் 'எக்ஸ் வீடியோஸ்'. தமிழ், இந்தியில் தயாராகி உள்ள இந்தப் படத்தில் அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிகா ஷான் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு சென்சார் போர்டு 'ஏ' சான்றிதழ் வழங்கி உள்ளது. இதுகுறித்து இயக்குனர் சஜோ சுந்தர், "தேவைப்படும் இடங்களில் மட்டுமே கிளாமர் வைத்துள்ளேன். அது படம் பார்க்கும் யாருக்கும் தவறாகத் தெரியாது. இது ஆபாசப் படம் அல்ல.. ஆபாசமான உலகம் குறித்து நாகரிகமாகச் சொல்லியிருக்கிறோம்' எனக் கூறியிருக்கிறார்.

X videos gets A censor certificate

"இந்தப் படத்தில் நான் மையப்படுத்தியிருப்பது பெண்களின் பாதுகாப்பு குறித்த கருத்துகளைத்தான். வெறுமனே உடலைக் காட்டி பணம் பண்ண எடுக்கப்பட்ட படம் அல்ல . படத்திற்கு வைக்கப்பட்ட தலைப்பு வேண்டுமானால் ஆபாச படங்கள் கொண்ட தளத்தின் பெயரில் இருக்கலாம். ஆனால் அந்தத் தளத்திற்கே ஆப்பு வைக்க எடுக்கப்பட்ட படம்.

அழகான பெண்களின் உடலமைப்பை குறிவைக்கும் ஆண்ட்ராய்ட் மாஃபியாவுக்கு எதிரான படம் இது. இந்தப் படத்தை சென்சார் போர்டிலுள்ள பெண் உறுப்பினர்களும் பார்த்தார்கள். இன்று அவசியம் சொல்லப்படவேண்டிய கருத்துள்ள முக்கியமான படம் இது என்று பாராட்டினார்கள்." என்று கூறியுள்ளார்.

English summary
'X Videos' movie directed by Hari's assistant Sajo Sundar. This film got 'A' certificate by the sensor board .

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil