மாஸ்டர் தயாரிப்பாளரின் அடுத்த படம்… அதர்வாவின் தம்பி ஹீரோவாகிறார் !
சென்னை : மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இப்படத்தில் நடிகர் முரளியின் மகனும் அதர்வா முரளியின் இளைய சகோதரரான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
பில்லா , அறிந்தும் அறியாமலும் படங்களை இயக்கிய விஷ்ணுவரதன் இப்படத்தை இயக்க உள்ளார்.

மாபெரும் வெற்றி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்தார். 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான இத்திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

அடுத்தப்படம்
இந்நிலையில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் இது.

கதாநாயகனாக அறிமுகம்
பன்முகதிறமை வாய்ந்த இயக்குநர் விஷ்ணு வரதனுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நடிகர் முரளியின் மகனும் அதர்வா முரளியின் இளைய சகோதரரான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகி நடிக்கிறார். இத்திரைப்படம் சம்பந்தப்பட்ட இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

காதல் திருமணம்
மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகளுமான சினேகா பிரிட்டோவுக்கும் ஆகாஷூக்கும் சிங்கப்பூரில் படித்துக் கொண்டிருந்த போதே காதலித்தனர். இதையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











