காதல், திருமணம், விவாகரத்து, சர்ச்சை, ஆடை... இப்போ மட்டும் ஏன் இந்த ‘முகமூடி’ அமலாபால்?

தனது புதிய காதலர் பற்றி அமலாபால் ரகசியம் காப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

Recommended Video

AL Vijay Marriage: பெற்றோர் ஆசியுடன் மறுமணம் செய்த இயக்குநர் ஏ.எல்.விஜய்- வீடியோ

சென்னை: எப்போதுமே தன் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் சுபாவம் கொண்டவர் அமலாபால். ஆனால், தனது புதிய காதலர் விசயத்தில் மட்டும் அவர் ரகசியம் காப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

சிந்து சமவெளி என்ற சர்ச்சை படம் மூலம் தமிழில் அறிமுகமானார் அமலாபால். முதல் படமே மருமகளுக்கும், மாமனாருக்குமான தவறான உறவைப் பற்றி பேசியதால், அமலாபால் மீது தவறான அபிப்ராயமே ரசிகர்கள் மத்தியில் உண்டானது. ஆனால், அந்த இமேஜை உடைத்துப் போட்டது மைனா.

அதனைத் தொடர்ந்து கதைகளைத் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார் அமலாபால். அதனாலேயே வெகு குறைந்த காலத்திலேயே விஜய், தனுஷ் என முன்னணி நாயகர்களுக்கு நாயகியானார்.

திருமணம்:

திருமணம்:

தெய்வத்திருமகள் மற்றும் தலைவா படங்களில் நடித்த போது, இயக்குநர் விஜய்க்கும் அமலாபாலுக்கும் இடையே காதல் உண்டானது. தமிழின் முன்னணி நாயகியாக இருந்தபோதே, திருமணம் செய்து கொண்டு, நடிப்பதில் இருந்து விலகினார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். விவாகரத்தும் செய்து கொண்டனர்.

மீண்டும் நடிப்பு:

மீண்டும் நடிப்பு:

அதனைத் தொடர்ந்து மீண்டும் படங்களில் தீவிரமாக நடிக்கத் தொடங்கினார். இம்முறை கடும் சவால்களுக்கு இடையே தான் அவருக்கு பட வாய்ப்புகள் அமைந்தது. ஆனாலும் சிறந்த கதாபாத்திரங்களாகவே தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார். இதனால் மீண்டும் திறமையான நடிகை எனப் பேர் எடுத்தார்.

விஷ்ணுவுடன் காதல்:

விஷ்ணுவுடன் காதல்:

பாராட்டுகளுக்கு இடையே அவர் சர்ச்சைகளிலும் சிக்கத் தவறவில்லை. ராட்சசன் பட வெற்றியைத் தொடர்ந்து, அவருக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இடையே காதல் என்ற தகவல் தீயாய் பரவியது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்தத் தகவலை விஷ்ணு விஷால் மறுத்ததைத் தொடர்ந்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

சமூகவலைதளம்

சமூகவலைதளம்

அவ்வப்போது தனது சமூகவலைதளப் பக்கத்தில் கவர்ச்சியாக உடை அணிந்த புகைப்படங்களை அவர் பதிவேற்றம் செய்து வருகிறார். இது தொடர்பான விமர்சனங்களையும் அவர் கண்டு கொள்வதில்லை. எப்போதும் தன் மனதுக்கு பிடித்தமானவற்றை, யாருக்கும் பயப்படாமல் செய்வதையே அவர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

ஆடையில்லா நடிப்பு:

ஆடையில்லா நடிப்பு:

ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்தது கூட அப்படித்தான். மற்ற நடிகைகள் நடிக்கத் தயங்கும் கதாபாத்திரத்தில் போல்டாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அப்படம் பற்றிய பேட்டிகளிலும் அமலாபால் கூறியிருக்கும் தகவல்கள் மற்றவர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறது.

காதலர் யார்?

காதலர் யார்?

இந்தச் சூழ்நிலையில் தான் தனது அடுத்த காதல் பற்றி ஓப்பனாக பேசியிருக்கிறார் அமலாபால். ஆனால் எப்போதும் வெளிப்படையாக பேசும் அவர், இந்த விவகாரத்தில் மட்டும் சற்று பின்வாங்கி இருக்கிறார். தன் காதலரைப் பற்றி வெளிப்படையாக எந்தத் தகவல்களையும் அவர் கூறவில்லை. இது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. புதிய காதலர் வருகையால் தான் அமலாபால் இப்படி மாறி விட்டாரா என்பது தான் அவர்களது ஆதங்கமே. பார்ப்போம், கத்தரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வராமலா போய் விடும் அமலாபால்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X