சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க நான் ரெடி - நடிகை ஒய்.ஜி மதுவந்தி

By R VINOTH

சென்னை: தமிழ்த் திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த ஒய்.ஜி.மகேந்திராவின் மகள் ஒய்.ஜி.மதுவந்தியும் தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து முத்திரை பதித்து வருகிறார்.

முந்தைய காலங்களில் நாடக துறையில் சிறப்பாக நடித்த நடிகர்கள் வெள்ளித்திரையில் நடிப்பதற்கு முன்மொழியப்பட்டனர். நடிப்பு என்ற ஒரு கலையின் உட்பொருளை தெளிவாக கற்றுக்கொடுக்கும் ஒரு துணையாக நாடக மேடைகள் அன்று நடிகர்களுக்கு விளங்கியது.

Y.G.Madhuvanthi has a footprint in Music,Drama and Acting

இன்று ஒரு சிலரே அப்படிப்பட்ட நாடக கலாசாரத்தை பின்பற்றி வருகின்றனர். நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா இன்றளவும் நாடக மேடைகள் அமைவதில் பெரும் பங்கு வகிக்கின்றார். அவரை தொடர்ந்து அவரது மகளான ஒய்.ஜி மதுவந்தி மேடை நாடகம் எனும் விருந்தை மக்களுக்கு அளித்து வருகின்றார்.

ஒய்.ஜி. மதுவந்தி தனது தந்தை ஒய்.ஜி மகேந்திராவுடன் மேடை நாடகங்களில் நடிக்க துவங்கி கடந்த 7 வருடமாக அவரே மேடை நாடகங்கள் தயாரித்து வெளியிட்டு பெரும் வெற்றியையும் பெற்றுள்ளார்.

தியேட்டர் ஆஃப் மகம் (Theatre of Maham) எனும் இவரது மேடை நாடகங்கள் தயாரிப்பு நிறுவனம் மூலமாக சிவசம்போ, பெருமாள், தில்லாலங்கடி மோகனாம்பாள் உள்ளிட்ட நாடகங்களை தயாரித்துள்ளார். குறிப்பாக பெருமாள் என்னும் நாடகத்தை இதுவரை 100க்கும் மேற்பட்ட மேடைகளில் அரங்கேற்றி உள்ளார். இவை அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி 50க்கும் மேற்ப்பட்ட இடங்களிலும் வெளிநாடுகளிலும் இந்த நாடகங்கள் மேடையேற்றப்பட்டது.

பரதநாட்டிய கலைஞர், மேடை பாடகி, நடிகை என இயல் இசை நாடகம் என்று மூன்று துறையிலும் தனது தனித்துவத்தை நிருபித்திருக்கிறார்.

தற்போது நாடகங்கள் மட்டுமன்றி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை ஒய்.ஜி மதுவந்தி, பல படங்களில் நடித்தும் வருகிறார்.

இவருக்கு ஏற்கனவே ரஜினி நடித்த முத்து, கமல் நடித்த ஹேராம் போன்ற படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கதவை தட்டியது. ஆனாலும் அந்தப் படங்களில் நடிக்க மறுத்து விட்டார்.

ஒரு முறை இவருடைய நாடகத்தை பார்க்கச் சென்ற இயக்குநர் சீனு ராமசாமி, இவரிடம் சினிமாவில் நடிக்க வைக்க சம்மதம் கேட்டுள்ளார். அதன் பிறகே இவர் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை படத்தில் பெண் காவல் அதிகாரியாக நடித்தார். குடும்ப பாங்கான, சவாலான கதாபாத்திரங்கள் உள்ள நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்குமென்றும், அப்படி பட்ட கதாபாத்திற்காக தான் நடிப்பதற்கு எப்பவும் ரெடி என்றும் கூறுகிறார் ஒய்.ஜி மதுவந்தி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X