அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. உறுதி செய்த உறவினர்.. அனி வீட்டில் எப்போது விசேஷம்?

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களின் படங்களுக்கு அவர்தான் இசையமைப்பாளர். சூழல் இப்படி இருக்க அனிருத்துக்கும், சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியான சூழலில் அதனை உறுதி செய்திருக்கிறார் நடிகரும், அனியின் உறவினருமான ஒய்.ஜி. மகேந்திரன்.

தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய திரைப்படம் 3. அந்தப் படத்தில்தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் இசையமைத்த அத்தனை பாடல்களும், பின்னணி இசையும் பெரிய கவனத்தை ஈர்த்தன. அதுவும், 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் இந்தியா முழுவதும் ஒலித்து அவரை ஓவர் நைட்டில் ஒபாமா ஆக்கியது என்றுதான் சொல்ல வேண்டும்.

Y G Mahendran Confirms Anirudh Kavya Maran Wedding Calls Them a Super Couple
Photo Credit:

டாப் இசையமைப்பாளர்: 3 படத்துக்கு பிறகு அனிருத் காட்டில் அடைமழைதான். பெரிய பெரிய ஹீரோக்களின் படங்கள் எல்லாம் அவருக்கு புக் ஆகின. ஒருகாலத்தில் ரஜினி, கமல் உள்ளிட்டோருக்கு ஆஸ்தான இசையமைப்பாளர்களாக இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி இருந்தார்களோ அப்படி அனிருத் மாறினார். தங்களது படங்கள் என்றாலே இசையமைப்பாளர் அனிருத்தான் என்பதை உறுதி செய்துகொண்டார்கள். அந்த இசை ஹிட்டாகுதோ, இல்லையோ அனி இசை இருந்தால் அப்படத்தின் பாடல்கள் சென்சேஷனல் ஆகிவிடும் என்ற நிலைமைதான் இருக்கிறது.

Also Read
பாக்யராஜ் அந்த சோகத்தில்தான் இறந்திருப்பார்.. அடித்து சொல்லும் நடிகர் நெப்போலியன்
பாக்யராஜ் அந்த சோகத்தில்தான் இறந்திருப்பார்.. அடித்து சொல்லும் நடிகர் நெப்போலியன்

சிங்கிள் அனிருத்: அடுத்ததாக ரஜினியை வைத்து கமல்ஹாசன் தயாரிக்கும் தர்மன் படத்துக்கும் அனிருத்தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபக்கம் இருக்க அனிருத்துக்கு எப்போது திருமணம் என்ற கேள்வி சமீபமாக அடிக்கடி எழுகிறது. அவருக்கு வயது இப்போது 35 ஆகும். அவரிடம் திருமணம் குறித்து கேட்டால், அவர் ஏதோ ஒன்றை சொல்லி சமாளித்து அங்கிருந்து நகர்ந்துவிடுவார்.

காவ்யா மாறனுடன் காதல்?: அதேசமயம் அவரும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனும் காதலிக்கிறார்கள் என்றும்; விரைவில் அவர்களுக்கு வீட்டு சம்மதத்துடன் திருமணம் நடைபெறும் என்றும் சமீபகாலமாக தொடர்ந்து தகவல்கள் வருகின்றன. ஆனால் அதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை அமைதியாகவே இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகரும், அனிருத்தின் உறவினருமான ஒய்.ஜி.மகேந்திரன் இந்த விஷயத்தை உறுதி செய்திருக்கிறார்.

எப்போது திருமணம்?: நடிகை குட்டி பத்மினியின் யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், "அனிருத் ரொம்ப சாதுவான பையன். அவர் விரைவில் மிகப்பெரிய திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இதன் மூலம் அவருக்கு வாழ்த்து சொல்லியாக வேண்டும். நானும் கேள்விப்பட்டதை வைத்துதான் உறுதியாக சொல்கிறேன். அவர்கள் சூப்பர் ஜோடி. அந்த பெண்ணும் சாதாரணமானவர் கிடையாது.

ஒரு டீமையே ஹேண்டில் செய்யும் சாமர்த்தியம் அந்த்ப் பெண்னுக்கு இருக்கிறது. அவருடைய அப்பாவின் தொழில் ஜீனை இவருக்குள் கொடுத்திருக்கிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் நிறைய பேரை சந்தித்திருக்கிறோம். அந்த பிஸ்னெஸ் மைண்ட் இந்தப் பெண்ணுக்கும் இருக்கிறது. அனிருத்தும், அந்தப் பெண்ணும் சேர்ந்து மியூசிக்கள் பிஸ்னெஸ் செய்வார்கள்" என்றார். ஆக, அனிருத் - காவ்யாவின் திருமணத்தை ஒய்ஜி மகேந்திரன் உறுதி செய்திருப்பதால் அனைவரும் வாழ்த்துக சொல்லிவருகிறர்கள். மேலும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read more about: anirudh அனிருத்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X