தனுஷை எனக்கு பிடிக்கவே பிடிக்காது.. அய்யய்யோ ரஜினி உறவினர் என்ன இப்படி சொல்லிட்டாரு

சென்னை: தனுஷ் இப்போது குபேரா படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தை சேகர் கம்முல்லா இயக்கிவருகிறார். மேலும் தனது 50ஆவது படத்தையும் தனுஷே இயக்கி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அவரும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் விவாகரத்து வேண்டி நீதிமன்ற படிகள் ஏறியிருப்பதாக கடந்த சில வாரங்களாகவே பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நடிகரும், ரஜினிகாந்த்தின் உறவினருமான ஒய்.ஜி.மகேந்திரன் தனுஷ் பற்றி பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தனுஷ் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அவர் அறிமுகமானபோது அவரை பலரும் கிண்டல் செய்தனர். ஆனால் தனது குடும்ப சூழ்நிலை கருதியும், வென்று தனது குடும்பத்தை கரையேற்ற வேண்டும் என்பதை நினைத்தும் அமைதியாகவே அதனை கடந்து சென்றார். அடுத்ததாக அவர் நடித்த காதல் கொண்டேன் திரைப்படம் அவரை பலரிடமும் கொண்டு சேர்த்தது. முக்கியமாக அவரை கிண்டல் செய்தவர்கள் எல்லாம் கொஞ்சம் அமைதியாக ஆரம்பித்தார்கள்.

Y G Mahendran Open Talks about Dhanush At Latest Interview

அசுர வளர்ச்சி: காதல் கொண்டேன் ஹிட்டுக்கு பிறகு தனுஷின் நடிப்பில் பல படங்கள் வெளியாகின. அவரும் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டே சென்றார். ஒருகட்டத்தில் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் அவர். மேலும் ஹாலிவுட்டுக்கும் சென்று நடிக்க ஆரம்பித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. அடுத்ததாக குபேரா, இளையராஜா உள்ளிட்ட படங்களும் வெளியாகவிருக்கின்றன. மேலும் இயக்குநர் அவதாரத்தையும் அவர் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம்: இதற்கிடையே ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் தனுஷ். சினிமாவுக்குள் நுழைந்தபோது எப்படி கேலிகளையும், விமர்சனங்களையும் சந்தித்தாரோ; அதேபோல் போயஸ் கார்டனுக்குள் ரஜினியின் மருமகனாக நுழைந்தபோதும் அதே கேலிகள், விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் காதல் துணையோடு அதையெல்லாம் அசால்ட்டாக கடந்துபோனார் தனுஷ். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

பிரிவு: கிட்டத்தட்ட 18 வருடங்கள் அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்தது. என்ன நடந்ததோ தெரியவில்லை கடந்த 2022ஆம் ஆண்டு தாங்கள் பிரிவதாக இருவருமே அறிவித்தனர். இருந்தாலும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. எனவே கண்டிப்பாக இரண்டு பேரும் இணைந்துவிடுவார்கள் என்று ரசிகர்கள் நம்பினர். மேலும் அவர்களை சேர்த்துவைக்க குடும்பத்தினர் முயன்றுவருவதாகவும் தகவல்கள் வேகமாக பரவிவந்தன. ஆனால் இரண்டு பேரும் விவாகரத்து வேண்டி நீதிமன்றம் சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஒய்.ஜி.மகேந்திரன் பேட்டி: இந்நிலையில் நடிகரும், ரஜினிகாத்தின் உறவினருமான ஒய்.ஜி.மகேந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "தனுஷ் இன்று சிறப்பான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய ஆரம்பகாலத்தில் அவரை எனக்கு பிடிக்கவே பிடிக்காது. அவருடைய நடிப்பின் மீது எனக்கு பெரிய அளவிலான உடன்பாடும் இருந்தது இல்லை. ஆனால் போகப்போக அவர் தனது நடிப்பில் விஸ்வரூபம் எடுத்தார். அசால்ட்டாக நடிக்கக்கூடிய திறன் உடையவர்.

கமிட் செய்யமாட்டேன்: தனுஷே என்னிடம் வந்து உங்களை எனது படத்தில் கமிட் செய்யமாட்டேன். ஏனெனில் அங்கும் வந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னிடம் கலாட்டா செய்வீர்கள் என்று விளையாட்டாக பல முறை சொல்லியிருக்கிறார்"" என்றார். அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X