கமலுக்கும் ரஜினிக்கும் தீப்பொறியும் இருக்கிறது; போட்டியும் இருக்கிறது.. ரஜினி உறவினர் ஓபன் டாக்
சென்னை: Rajini and Kamal (ரஜினி மற்றும் கமல்) கமல் ஹாசனுக்கும், ரஜினிகாந்த்துக்கும் ஒரு தீப்பொறியும், போட்டியும் இருந்துகொண்டுதான் இருக்கிறது என ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்திருக்கிறார்.
கமல் ஹாசனும், ரஜினிகாந்த்தும் இந்திய சினிமாவின் அடையாளங்களாக இருப்பவர்கள். இரண்டு பேருமே கே.பாலசந்தர் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள். ஆரம்பத்தில் கமலும் ரஜினியும் பல படங்களில் ஒன்றாக நடித்தனர். இரண்டு பேரும் தொடர்ந்து சேர்ந்து நடித்தால் இரண்டு பேரின் வியாபாரமும் கெட்டுப்போகும் என யோசித்து தனித்தனியாக நடிக்க ஆரம்பித்தார்கள்.

உலக நாயகன், சூப்பர் ஸ்டார்: ஒருபக்கம் கமல் ஹாசன் வித்தியாச வித்தியாச கதைக்களங்களில் நடிக்க; மறுபக்கம் ரஜினிகாந்த் கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்டார். இரண்டு பேருமே தங்களது பாதையில் சிறப்பாக பயணிக்க இரண்டு பேரும் வளர்ந்தார்கள். அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி இரண்டு பேருக்குமான வியாபாரமும் பெருகியது. இதனால் ஒருவர் உலக நாயகன் என்றும், இன்னொருவர் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
சிறந்த நண்பர்கள்: தனித்தனியாக நடித்தபோது கமலுக்கும், ரஜினிக்கும் போட்டி உச்சத்தில் இருந்தது. அந்தப் போட்டி ஆரோக்கியமானதாகவே இருந்தது. ஒரு மேடையில்கூட, 'இதற்கு முந்தைய தலைமுறையிலும் சரி இனி வரப்போகும் தலைமுறையிலும் சரி எங்கள் இருவரைப்போல் இந்த திரையுலகில் சிறந்த நண்பர்கள் இருந்ததுமில்லை; இருக்கப்போவதுமில்லை' என கமல் எமோஷனலாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போதும் போட்டிதான்: காலங்கள் மாறி கமல் ஹாசன் சில காலம் அரசியல் பக்கம் ஒதுங்கினார். ரஜினிகாந்த் சில வருடங்களாக ஹிட் படத்துக்கு தவித்துக்கொண்டிருந்தார். சூழல் இப்படி இருக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தின் மூலம் கமல் ஹாசன் தரமான கம்பேக் கொடுத்தார். படமும் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அதேபோல் ரஜினியும் ஜெயிலர் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறார். அந்தப் படமும் 500 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிரது. எனவே ரஜினிக்கும், க் அமலுக்கும் இடையேயான போட்டி மீண்டும் ஆரம்பித்திருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

ஒய்.ஜி.மகேந்திரன் பேட்டி: இந்நிலையில் ரஜினியின் உறவினரும், நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டியில், "73 வயதாகும் நான் ஆறு, ஏழு திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இதை பார்க்கும் பலரும் எப்படி இப்படி உங்களால் ஓட முடிகிறது என்கிறார்கள். அவர்களிடம் நான், என்னையே இப்படி சொல்கிறீர்கள். ரஜினி, கமலை பாருங்கள். இன்றும் அவர்களை சினிமா உலகம் அடையாளமாக வைத்திருக்கிறது.
தீப்பொறி இருக்கு: வயதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது. அவர்கள் இவருக்குள்ளும் அந்த தீப்பொறி கனலாக இருக்கிறது. அவர்களுக்குள் இன்னமும் போட்ட் இருக்கத்தான் செய்கிறது. ஆன்மீகத்தில் ரஜினிகாந்த் இன்று ஈடுபடவில்லை.ஆரம்பத்திலிருந்தே ஈடுபட்டுவருகிறார். ஆன்மீகத்தின் மூலம் முக்தி அடையலாம் என்பதை அவர் நம்புகிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











