பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பரீட்சைக்கு நேரமாச்சு!
பரீட்சைக்கு நேரமாச்சு.. எண்பதுகளில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் இது.
ஆனால் இந்தப் படத்துக்கு மூலம் ஒரு நாடகம். அந்த நாடகத்தை எழுதி அரங்கேற்றியவர் ஒய் ஜி பார்த்தசாரதி. 1978-ம் ஆண்டு அதே பெயரில் இயக்கி, அதில் நடித்திருந்தார். இந்நாடகம் அப்போது பெரும் வரவேற்பு பெற்றது.

அதைத்தான் பின்னர் முக்தா சீனிவாசன் இயக்க சிவாஜி நடித்தார். அந்தப் படத்தில் ஒய் ஜி மகேந்திரன், சிவாஜியின் மகனாக நடித்திருந்தார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, பரீட்சைக்கு நேரமாச்சு நாடகத்தை ஒய்.ஜி.மகேந்திரன் செப்டம்பர் மாதம் 14-ம் தேதி சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் ஒய்ஜி மகேந்திரன் கூறுகையில், "என் தந்தை உருவாக்கிய பரீட்சைக்கு நேரமாச்சு நாடகம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. இந்த நாடகத்தை நான் மீண்டும் மேடையேற்ற ஆசைப்படுகிறேன். தற்போது உள்ள மக்களின் ரசனைக்கேற்ப இந்த நாடகத்தை உருவாக்கப் போகிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











