twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமர்சியலா இருந்தாலும் காரணம் வேணும்ல... விஜய் சேதுபதி இயக்குனர் கறார்

    By
    |

    சென்னை: கமர்சியல் படம் என்றாலும் காரணம் இல்லாமல் படம் இயக்க மாட்டேன் என்று இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் கூறினார்.

    விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படம், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்குகிறார். இவர், இயக்குநர் ஜனநாதனிடம் பேராண்மை, புறம்போக்கு படங்களில் பணிபுரிந்தவர்.

    Yaadhum Ooore Yaavarum Kelir director says that he want to make films with a purpose

    படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைக்கிறார். சினி இன்னோவேஷன்ஸ் சார்பில் ஆர்.கே.அஜெய்குமார் இணை தயாரிப்பு செய்கிறார்.

    விஜய் சேதுபதி ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். வில்லனாக இயக்குனர் மகிழ் திருமேனி நடிக்கிறார். மற்றும் விவேக், இயக்குனர் மோகன் ராஜா, கனிகா உட்பட பலர் நடிக்கின்றனர். இரண்டு கட்டப் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது. தஞ்சாவூர் அருகே பிரமாண்ட தேவாலயத்தில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

    படாரென கூட்டத்தில் பாய்ந்து திடீரென பார்வையாளரின் கன்னத்தை கடித்த பிரபல தொகுப்பாளினி.. வைரல் வீடியோபடாரென கூட்டத்தில் பாய்ந்து திடீரென பார்வையாளரின் கன்னத்தை கடித்த பிரபல தொகுப்பாளினி.. வைரல் வீடியோ

    படம் பற்றி இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்திடம் கேட்டபோது, காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய கதை. சர்வதேச அளவில் நடக்கும் பிரச்னையை

    பேசும் படம் இது. கமர்சியல் படம்தான். இருந்தாலும் சிறந்த விஷயம் ஒன்றை படம் பேசும். கமர்சியலாக இருந்தாலும் காரணம் இல்லாமல் படம் இயக்க முடியாது. கனிகாவுக்கு என்ன ரோல் என்பதை இப்போது கூற இயலாது. முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். சிறந்த நடிகை அவர் என்றார்.

    English summary
    Yaadhum Ooore Yaavarum Kelir director says, though a commercial flick, he wants to make films with a purpose.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X