தயாரிப்பு தரப்புடன் மோதல் அந்த டீசருக்கும் எனக்கும் சம்பந்தமில்லை விஜய் சேதுபதி பட இயக்குநர் பகீர்!
சென்னை: விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டீசர் குறித்து அதன் இயக்குநர் கூறியிருக்கும் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இந்தப் படத்தை வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்க்கியுள்ளார் .
இந்தப் படத்தின் டீசர் மார்ச் 4-ஆம் தேதி வெளியானது. இந்த டீசர் விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அத்தனை அப்டேட்ஸ்
இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய வெங்கட கிருஷ்ண ரோக்நாத் என்பவர் எனக்கு தெரியாமலேயே இந்த டீசர் வெளிவந்து விட்டது என்று அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, மன்னிக்கவும்.. இது வரை நான் இயக்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் படம் பற்றிய அத்தனை அப்டேட்சையும் நான் தவறாமல் பதிவிட்டிருக்கிறேன்.

முக்கியமான காரணம்
இந்த முறை டீசர் வெளிவருவது சம்பந்தமான போஸ்டரையோ வெளிவந்த டீசரையோ நான் எனது முக நூல் பக்கத்தில் வெளியிடவில்லை. அதற்கு மிக முக்கியமான காரணம் நான் இயக்கிய படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்துக்கான டீசர் வெளி வருகிறது என்று எனக்கு தெரியாது.

மவுனமாக கடந்து போகிறேன்
கூடவே மிக முக்கியமான தகவல் அந்த டீசருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. நான் அந்த டீசர் ரிலீஸ் ஆகி 45 நிமிடங்கள் கழித்தே பார்த்தேன். திரும்பவும் மன்னிக்கவும் நான் வேறு வழியில்லாமல் அந்த டீசரை பற்றி பேசாமல் மௌனமாக கடந்து போகிறேன்.

தயாரிப்பு தரப்பின் குளறுபடி
உண்மையில் இந்த படத்தின் ஆன்மாவை உள்ளங்கையில் காட்ட கூடிய நான் கட் பண்ணிய டீசர் என்னிடம் இருக்கிறது. டப்பிங் செய்யப்படாமல் RR செய்யப்படாமல் di செய்யப்படாமல் அப்படியே ராவாக இருக்கிறது. தயாரிப்பு தரப்போடு இந்த குளறுபடிக்கு அடிப்படை காரணம் பற்றி கேட்டிருக்கிறேன்.

தக்க பதில் வந்தால்
தக்க பதில் வந்தால் என் முக நூல் நண்பர்களுக்கு அறிவிக்கிறேன்.
இவ்வாறு இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோக்நாத் தெரிவித்துள்ளார். படத்தின் இயக்குநரே டீசர் குறித்து இப்படி ஒரு பதிவை ஷேர் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











