பிரபுதேவாவுடன் வேலை செய்தால் எக்ஸைட்டிங்கா இருக்கு... யாமி கெளதம் புகழாரம்
மும்பை: இந்தியில் பிரபுதேவா இயக்கத்தில் அறிமுகமாகும் நடிகை யாமி கெளதம், பிரபுதேவா புகழ் பாடி வருகிறார்.
யாராவது பிரபுதேவா என்று ஆரம்பித்து விட்டால் போதும் உடனே மளமளவென மூன்றாம் வாய்ப்பாடு ஒப்பிப்பது போல அவரைப் பற்றி மடமடவென பேச ஆரம்பித்து விடுகிறார்.
ஏன்... இப்படி என்று கேட்டால், அவ்வளவு இருக்கிறது சார் அவரைப் பற்றிப் பேச என்றும் விழி விரிய சந்தோஷமாக கூறுகிறார்.

உல்லாசா உச்சாகா...
2010ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான உல்லாசா உத்சாகா என்ற படம்தான் யாமியின் முதல் படம்.

இந்தியில் அறிமுகம்
தற்போது இந்தியில் அறிமுகமாகிறார் யாமி. இந்தப் படத்தை இயக்குவது பிரபுதேவா. இதில் அஜய் தேவ்கன், சோனாக்ஷி சின்ஹா ஆகியோரும் நடிக்கிறார்கள்.. சோனாக்ஷியும் பிரபுதேவா புகழ் பாடும் கோஷ்டியைச் சேர்ந்தவர்தான்.

ரொம்ப எக்ஸைட்டிங்கா இருக்கு....
பிரபுதேவா குறித்து யாமியிடம் கேட்டால், ரொம்ப எக்ஸைட்டிங்கா இருக்கு. அவரை சின்ன வயதிலிருந்தே நான் பார்த்து வருகிறேன். அவருடன் பணியாற்ற ஏங்கியிருக்கிறேன். இப்போதுதான் கை கூடியுள்ளது.

ஊர்வசி ஊர்வசி ரொம்பப் பிடிக்கும்...
அவர் நடித்து ஆடிய ஊர்வசி ஊர்வசி பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதை பலமுறை கேட்டு விட்டேன். இன்னும் அலுக்கவில்லை.

அவரை மாதிரியே.. முடியலை
அவரை மாதிரியே டான்ஸ் ஆட பலமுறை முயற்சித்தும் தோல்விதான் எனக்குக் கிடைத்துள்ளது. எப்படித்தான் கை கால்களை அப்படி வளைத்தாரோ.. சான்ஸே இல்லை என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பேசி நிறுத்தினார் யாமி.

ரொம்ப சிம்பிளான ஆளு...
சரி இன்னும் கொஞ்சம் ஜொள்ளுங்க என்று யாமியை தூண்டி விட்டபோது, அவர் மிகவும் சிம்பிளானவர், ஈஸியாக பழகுகிறார்.

அவருடன் ஆட வேண்டும்
மாதுரி தீட்சித்தும், பிரபுதேவாவும் சேர்ந்து கே சேரா சேரா என்ற பாடலுக்காக புகார் படத்தில் இணைந்து ஆடியிருப்பார்கள். அதே போல நானும் பிரபுதேவாவுடன் இணைந்து ஆட வேண்டும்.. அதுதான் எனது லட்சியம் என்றார் ஏக்கத்துடன்.


Click it and Unblock the Notifications











